சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!
Chhattisgarh Assembly Elections 2023: சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 83 இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்னும் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
Chhattisgarh Congress Candidates List: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதாவது 53 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்த 53 வேட்பாளர்களில், 14 எஸ்டி வேட்பாளர்களும், 6 வேட்பாளர்கள் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அதேபோல முன்னதாக, நவராத்திரியின் முதல் நாளில், முதல் பட்டியல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டது. முதல் வேட்பாளர் பட்டியலில் 30 பெயர்களை அறிவித்தது. அதாவது மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 83 இடங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சி இதுவரை அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இரண்டாவது பட்டியலில் இருக்கும் முக்கிய பெயர்கள் என்ன?
ராய்ப்பூர் நகர மேற்கு சட்டமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ விகாஸ் உபாத்யாய், ராய்ப்பூர் ரூரல் தொகுதியில் பங்கஜ் சர்மா, ராய்ப்பூர் நகர தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மஹந்த் ராம் சுந்தர் தாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துர்க் நகரில் சிட்டிங் எம்எல்ஏ அருண் வோரா மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இவரது தந்தை மோதிலால் வோரா அப்போதைய மத்திய பிரதேசத்தின் (சத்தீஸ்கர் தனி மாநிலம் உருவாவதற்கு முன்பு) முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் இன்னும் முதல் பட்டியல் வெளியிடப்படவில்லை
கடந்த அக்டோபர் 15ம் தேதி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான 229 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இதில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 230 தொகுகளில் 144 வேட்பாளர்களின் பெயரும், சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 30 வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் தெலுங்கானா 119 தொகுதிகளில் 55 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. அக்டோபர் 16 அன்று, மிசோரமில் உள்ள 40 இடங்களில் 39 இடங்களுக்கு வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. ராஜஸ்தானில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, 106 காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் எனத் தகவல்.
411 இடங்களுக்கு இன்னும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை
ராஜஸ்தானில் 200, மத்தியப் பிரதேசத்தில் 86, சத்தீஸ்கரில் 60, தெலுங்கானாவில் 64, மிசோரமில் ஒரு தொகுதியில் வேட்பாளர்களின் பெயர்கள் முடிவு செய்யப்படவில்லை. அதாவது மொத்தத்தில், ஐந்து மாநிலங்களிலும் உள்ள 411 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். 20 தொகுதிகளை உள்ளடக்கிய முதல் கட்ட தேர்தல் நவம்பர் 7ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் விரும்புகிறது.
நவம்பர் 7 ஆம் தேதி முதல் சட்டசபை தேர்தல்
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அக்போடபர் 09, திங்கள்கிழமை அன்று அறிவித்தது. அதில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பர் 7 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வெவ்வேறு நாட்களில் வாக்குபதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
5 மாநில சட்டசபை தேர்தல் அட்டவணை விவரம்
-- நவம்பர் 7 ஆம் தேதி மிசோரமில் முதலில் வாக்குப்பதிவு நடைபெறும்.
-- மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-- சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-- ராஜஸ்தானில் நவம்பர் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-- தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-- டிசம்பர் 3 ஆம் தேதி 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஐந்து மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது யார்?
தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியும் உள்ளது. தெலங்கானாவில் கேசிஆர் கட்சியான பிஆர்எஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது.
ஐந்து மாநில தேர்தலில் ஆட்சி அமைக்க எத்தனை இடங்கள் தேவை?
மாநிலம் | தேர்தல் நாள் | மொத்த தொகுதிகள் | ஆட்சி அமைக்க |
மிசோரம் | 7 நவம்பர் | 40 இடங்கள் | 21 இடங்கள் |
மத்தியப் பிரதேசம் | 17 நவம்பர் | 230 இடங்கள் | 116 இடங்கள் |
சத்தீஸ்கர் | 7 மற்றும் 17 நவம்பர் | 90 இடங்கள் | 46 இடங்கள் |
ராஜஸ்தான் | 23 நவம்பர் | 200 இடங்கள் | 101 இடங்கள் |
தெலுங்கானா | 30 நவம்பர் | 119 இடங்கள் | 60 இடங்கள் |
கடைசியாக ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் எப்பொழுது நடந்தது?
-- 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் டிசம்பர் 7 ஆம் தேதி (ஒரே கட்டம்)
-- மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 28 ஆம் தேதி (ஒரே கட்டம்)
-- தெலுங்கானாவில் டிசம்பர் 7 ஆம் தேதி (ஒரே கட்டம்)
-- மிசோரமில் நவம்பர் 18 ஆம் தேதி (ஒரே கட்டம்)
-- சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 (இரண்டு கட்டம்)
-- தேர்தல் முடிவுகள் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ