புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரி காமராஜ் நகர சட்டப்பேரவை  தொகுதியில் கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர் காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜான்குமார் என்.ஆர் காங்கிரஸின் புவனேஸ்வரனை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். 


மொத்தம் 2 சுற்றுக்களைக் கொண்ட காரமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் 14,782 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்., காங்., வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். புவனேஸ்வரனை விட காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7171 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.