’2024-ல் காங்கிரஸூக்கு வாய்ப்பே இல்லை’ அடித்துச் சொல்லும் காங்., மூத்த தலைவர்
காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கும் கட்டமைப்பை வைத்துக்கொண்டு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால், தேசிய மற்றும் மாநில கட்சிகள் அந்த தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளன. தேசிய அளவில் எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, கடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 9.78 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தாலும், இந்தமுறை ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. அதற்கு காரணம், 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.கவுக்கு தேசிய அளவில் மிகப்பரவலான அதிருப்திகள் மேலோங்கி இருக்கிறது.
ALSO READ | நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பவுள்ள 5 பிரச்சனைகள் - டி.ஆர்.பாலு தகவல்
3 வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. இதனை முன்வைத்து மாநிலக் கட்சிகளை ஒன்றிணைந்து மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் பா.ஜ.கவை எதிர்க்கலாம் என்ற வியூகத்தில் காங்கிரஸ் இருந்து வருகிறது. ஆனால், சரியான தலைமை இல்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மாநிலக் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருக்கும் உட்கட்சி பூசல்களால், அரசியல் களத்தில் பா.ஜ.கவை எதிர்த்து வீரியமாக செயல்படமுடியவில்லை. இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் இப்போதைய கட்டமைப்பை வைத்துக் கொண்டு 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறுவது கடினம் எனக் கூறியுள்ளார்.
ALSO READ | No more Farm Laws: நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தயார்
ஜம்மு காஷ்மீரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மாநிலம் முழுவதும் குலாம்நபி ஆசாத் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, பூஞ்ச் பகுதியில் பேசிய குலாம் நபி ஆசாத், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான பணிகளை காங்கிரஸ் இன்னும் தொடங்கவில்லை எனக் கூறினார். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது திரும்பப்பெறப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 300 எம்.பிகளை வெற்றி பெற்றால் மட்டுமே மத்திய அரசு கொண்டுவந்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை ரத்து செய்ய முடியும் என்றும் கூறினார். மேலும், மத்திய அரசுக்கு அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உரிமை உள்ளது என்றாலும், ஜம்மு காஷ்மீர் மாநில பிரிப்பை, அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் வழியாக மட்டுமே கொண்டுவந்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR