அசாம், மேற்கு வங்கத்தில் துவங்கியது சட்டமன்றத் தேர்தல்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு
மேற்கு வங்கம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 27: மேற்கு வங்கம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் தேர்தலை எதிர்கொள்ளும்.
அசாமில் ஒட்டுமொத்தமாக, 81,09,815 வாக்காளர்கள் முதல் கட்டத்தில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த தகுதியுடையவர்களாக உள்ளார்கள். அவர்களில், 40,77,210 ஆண்கள் மற்றும் 40,32,481 பெண்கள், 124 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள், ஒன்பது வெளிநாட்டு வாக்காளர்கள் உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் (West Bengal) முதல் கட்ட வாக்குப்பதிவு, புருலியாவில் உள்ள ஒன்பது இடங்களிலும், பாங்குராவில் நான்கு, ஜார்கிராமில் நான்கு மற்றும் பஸ்சிம் மெடினிபூரில் ஆறு இடங்களிலும், பாஜக தலைவர்ர் சுவேந்து அதிகாரியின் சொந்த ஊரான பூர்பா மெதினாபூரில் நான்கு இடங்களிலும் நடைபெறுகிறது. அனைத்து கோவிட் -19 வழிகாட்டுதல்களையும் பின்பற்றி தேர்தல்கள் நடைபெறுகின்றன.
ALSO READ: West Bengal Election 2021: மம்தாவை வீழ்த்த பிஜேபி தயாரித்துள்ள மாஸ்டர் ப்ளான்..!!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் (Assembly Election) முதல் கட்டத்தில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சில முக்கிய வேட்பாளர்கள்: திரிணாமுலின் சுஜோய் பானர்ஜி, பாஜகவின் சுதீப் முகர்ஜி மற்றும் புருலியாவில் காங்கிரசின் பார்த்தா பிரதிம் பானர்ஜி; திரிணாமுலின் ஜூன் மாலியா, பாஜகவின் சமித் தாஸ் மற்றும் மெடினிபூரில் சிபிஎம்மின் தருண் குமார் கோஷ்; திரிணாமுலின் தினன் ரே, பாஜகவின் தபன் பூயா மற்றும் கரக்பூரைச் சேர்ந்த சிபிஎம்மின் சதாம் அலி.
மேற்கு வங்கத்தின் வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான மக்கள் அனைத்து கோவிட் நெறிமுறைகளையும் பின்பற்றினாலும், சில இடங்களில் வாக்காளர்களும் கட்சித் தொண்டர்களும் முகக்கவசம் கூட அணியாலம் இருப்பதையும் பார்க்க முடிந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு முகக்கவசங்கள் அளிக்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஊடக அறிக்கையின்படி, மேற்கு வங்கத்தில், கரக்பூரில் வாக்குப்பதிவு சாவடி 98 மற்றும் 99 இல் ஈ.வி.எம் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வாக்களிப்பு நிறுத்தப்பட்டது.
மேற்கு வங்க தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் வாக்குப்ப்பதிவு சாவடி 206 மற்றும் 207 இல் சில டி.எம்.சி (TMC) தொழிலாளர்கள் வாக்காளர்களை திசை திருப்ப முயன்றதாக மேற்கு மெதினிபூர் வேட்பாளர் சமித் தாஸ் சனிக்கிழமை குற்றம் சாட்டியதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
ALSO READ: RSS-ன் இந்து மதத்தை நம்ப மாட்டோம் BJP-க்கு எதிராக யுத்தம் செய்வோம்: மம்தா பானர்ஜி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR