West Bengal Election 2021: மம்தாவை வீழ்த்த பிஜேபி தயாரித்துள்ள மாஸ்டர் ப்ளான்..!!

மேற்கு வங்க தேர்தலுக்கான மாஸ்டர் ப்ளானுடன் பாஜக களத்தில் இறங்கியுள்ளது. பல தலைவர்களுக்கு வெவ்வேறு பகுதிகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 7 பேர் கொண்ட சிறப்பு குழு  டெல்லியில் இருந்து அனுப்பப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 24, 2020, 09:12 PM IST
  • மிஷன் மேற்கு வங்காளம் என்னும் பாஜகவின் மாஸ்டர் ப்ளான்
  • 5 மண்டலங்களுக்கான மேற்பார்வையாளர்களைத் தவிர சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது
  • அனைத்து தலைவர்களும் உள்ளூரில், பொது மக்கள்வீட்டில் மதிய உணவு சாப்பிட அறிவுறுத்தல்
West Bengal Election 2021: மம்தாவை வீழ்த்த பிஜேபி தயாரித்துள்ள மாஸ்டர் ப்ளான்..!! title=

கொல்கத்தா: மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் (West Bengal Election) தனது முழு பலத்தையும் காட்ட தயாராக இருக்கும் பாஜக (BJP) தேர்தலுக்கான முழுமையான மாஸ்டர் ப்ளானை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல்,  முக்கிய தலைவர்களிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வெல்லும் பொருட்டு, மாநிலத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடையவும், அவர்கள் மனதில் இடம் பிடிக்கவும், பாஜக (BJP) ஒரு மைக்ரோ லெவல் உத்தியை வகுத்துள்ளது. இதற்காக,  மாநிலத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, மாநிலத் தலைவர்கள் அப்பகுதிக்கான பார்வையாளர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய தலைவர்களுக்கு பொறுப்புகள்
மாநிலத்தில் மொத்தம் 23 மாவட்டங்கள் உள்ளன, அவை 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் - வட வங்கம், நவாதீப், கொல்கத்தா, மேதனிப்பூர் மற்றும் ரார் பங்கா. 8 மாவட்டங்களைக் கொண்ட வட வங்க பிராந்தியத்தின்  மேற்பார்வையாளர் சந்தன் பாசு. மறுபுறம், நவத்வீப் பிராந்தியத்தின் பொறுப்பு பிஸ்வாப்ரியோ ராய் சவுத்ரி. கொல்கத்தா மண்டலத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங், மேதனிபூரின் ஜோதிர்மோய் சிங் மகாடோ மற்றும் ரார் பங்காவின் ராஜு பானர்ஜி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ | தாகூரின் சிந்தனையில் இருந்து உதித்தது தான் தற்சார்பு இந்தியா: பிரதமர் மோடி

'ஸ்பெஷல் டீம் - 7'ம் களத்தில் உள்ளது
5 பிராந்தியங்களின் மேற்பார்வையாளர்களை நியமித்ததைத் தவிர, பாஜக தலைமை மேற்கு வங்கத்தில் ஒரு  7 பேர் அடங்கிய சிறப்பு குழுவை உருவாக்கியுள்ளது. இதில் 7 முக்கிய தலைவர்கள் உள்ளனர் - சஞ்சய் பாலியன், கஜேந்திர சேகாவத், அர்ஜுன் முண்டா, மன்சுக் மண்டேவியா, கேசவ் மவுரியா, பிரதான் சிங் படேல் மற்றும் நரோத்தம் மிஸ்ரா ஆகியோர் இதன் உறுப்பினர்கள். இந்த தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் 6 மக்களவை இடங்களுக்கான பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில், இந்த தலைவர்கள் மேற்கு வங்கத்தின் (West Bengal) 42 மக்களவை இடங்களை நேரடியாக கண்காணிப்பார்கள்.

வாக்காளர்களின் வீட்டில் தினமும் மதிய உணவு 
வாக்காளர்களுடன் இணைவதற்கான வழிகள் குறித்தும் தலைவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான் மாஸ்டர் திட்டத்தின் கீழ், தலைவர்கள் உள்ளூர் வாக்காளர்களின் வீட்டில் தினமும் மதிய உணவு சாப்பிடுவார்கள். அப்போது அவர்கள் உள்ளூர் பிரச்சினைகளை பற்றி அவர்களுடன் விவாதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா  (JP Nadda) மற்றும் அமித் ஷா (Amit Shah) ஆகியோர் மேற்கு வங்க பயணங்களின்போது உள்ளூர் மக்களின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | MGR: இதய தெய்வமாக சரித்திரம் படைத்து கொடுத்துச் சிவந்த கரங்கள்

தலித்துகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் 
மாநிலத்தில் தங்கள் வாக்கு வங்கியை வலுப்படுத்த, தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினரை சந்தித்து, அவர்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களுக்கு இருக்கு பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜேபி நாட்டாவும் (JP Nadda) அமித் ஷாவும் தங்கள் பயணங்களில் இந்த பிரிவுகளை சேர்ந்த வீடுகளுக்கு செல்வதற்கு இதுவே காரணம். 

உள்ளூர் கலாச்சாரத்துடன் இணைதல்
வங்காளத்தின் உள்ளூர் கலாச்சாரத்துடன் தன்னை வலுவாக இணைத்துக் கொள்ளவும் பாஜக முயற்சிக்கிறது. இதற்காக, வங்காள அறிஞர்கள் மற்றும் கலைஞர்களை சந்திக்குமாறு தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வரிசையில், அறிஞர்கள் மற்றும் கலைஞர்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த வகையில், அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் ஏற்கனவே தக்ஷினேஸ்வர் காளி கோயில், காளிகட் கோயில் உள்ளிட்ட பல உள்ளூர் கோயில்களுக்கு சென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், அனைத்து தலைவர்களும் பிர்சா முண்டா முதல் குதிராம் போஸ், சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ALSO READ | PFI வங்கிக் கணக்குகளில் ₹100 கோடிக்கும் மேல் முதலீடு: அமலாக்கத் துறை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News