தூர்தர்ஷன் தொலை காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான ராமாயணம் தொலைகாட்சி தொடரை யாராலும் மறக்க முடியாது. 2020 ஆம் ஆண்டில் காவிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பட்டது. கோவிட் -19 தொற்றுநோயால் நாட்டில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த தொலைகாட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் ராமராக நடித்த அருண் கோவில் மக்கள் மத்தியில் ராமராகவே வழிபடப்பட்டார். மக்கள் அவரை பகவான் ராமராகவே பார்த்தனர்.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதீய ஜனதா கட்சிக்கு (BJP) பெரும் ஊக்கம் அளிக்கும் நிகழ்வாக, ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராமர் வேடத்தில் நடித்த நடிகர் அருண் கோவில் வியாழக்கிழமை பாஜகவில் சேர்ந்தார். 2020 ஆம் ஆண்டில் காவிய தொலைக்காட்சி நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பபட்ட போது, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது COVID-19 தொற்றுநோயால் நாடு தழுவிய பொது முடக்க காலத்தில் தான் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு தொடர்களும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. மேலும் முந்தைய சாதனைகள் அனைத்தையும் உடைத்து உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியது.
“சிலர் எதையும் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. அவர்களுக்கு ஒருவிதமான ஒவ்வாமை இருக்கிறது. பகவான் ராமர் என்பது எங்கள் லட்சிய புருஷர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அவரை ஏன் எதிர்க்க விரும்புகிறீர்கள்? தேச முன்னேற்றத்திற்கு இந்த வெறுப்பு மிகவும் பாதிப்பை கொடுக்கும். இந்த நாடு ராமருக்கு சொந்தமானது ” என்று பாஜகவில் சேரும்போது அருண் கோவில் கூறினார்.
மேற்கு வங்க சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேந்த முக்கிய தலைவர்கள் உட்பட பல பாஜவில் இணைந்து விட்டனர். அதோடு பலரும் பாஜகவில் இணைந்து விட்டனர்.
அங்கே பாஜகவின் பிரச்சார கூட்டங்களுக்கு வரலாறு காணாத அளவில் கூட்டம் கூடி வருகிறது.
ALSO READ | WB elections 2021: மம்தா கட்சிக்கு புதிய பெயரை வைத்த பிரதமர் நரேந்திர மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR