ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மக்களுக்கு சேவை செய்ய கட்சிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியமைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களின் முடிவினை தொடர்ந்து நடைப்பெற்ற முதல் பொதுகூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோர் கட்சியின் செயல்திறனுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா முதலமைச்சர்களை வாழ்த்தினர். மேலும் மக்களுக்கு சேவை செய்ய கட்சிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியமைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி எதிர்பார்த்த 220 தொகுதிகளை எட்டாத போதிலும், அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க போதுமான இடங்களை கைப்பற்றியுள்ளது. அதேவேளையில் ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைப்பது இழுபறியிலேயே உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியாணாவில், பாஜக அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டது, என்ற போதிலும் ஆட்சி அமைக்க போதுமான இடங்களை பாஜக இதுவரை உறுதி செய்யவில்லை. அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவைப்படும் நிலையில்., பாஜக 40 இடங்களை மட்டுமே எட்டியுள்ளது. காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.


ஹரியானா தேர்தல் முடிவு, மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இழுபறி நிலையினை நீடிக்க செய்துள்ளது. பரபரப்பு ஒட்டிக்கொண்ட அரசியல் அணுகுமுறை நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு எதிராக மாநிலத்தில் கட்சியின் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க கைகோர்க்குமாறு மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு விரைவாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் பாஜக-விற்கு எதிராக மற்ற கட்சிகள் ஒன்றுக்கூட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தடுக்க பாஜக சில யுக்திகளையும் கையாளக்கூடும் என கருதப்படுகிறது.


அதன் அறிகுறியாய் இன்றைய நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பாஜக தலைவர்கள், ஹரியானாவில் மீண்டும் சேவை செய்ய வாய்ப்பு அளித்த மக்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளது, பாஜக மீண்டும் ஒரு குருஷேஸ்ரத்தை(கர்நாடாக போன்று) நடத்த இயலும் என மக்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.


உரிமை கோருவதற்கான தனது நோக்கத்தை பாஜக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. என்றபோதிலும் இதற்கான குறிப்புகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் ட்வீட்களில் வந்துள்ளது.



இதுதொடர்பாக அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., “ஹரியானாவில் உள்ள (மனோகர் லால்) கட்டார் அரசாங்கம் (நரேந்திர) மோடியின் மத்திய தலைமையின் கீழ் மக்கள் நலனுக்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. பாஜகவை மிகப் பெரிய கட்சியாக மாற்றியமைத்து, அவர்களுக்கு சேவை செய்ய மற்றொரு வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.




பிரதமர் மோடி சில நிமிடங்கள் கழித்து ஷாவின் ட்வீட்களைப் பின்தொடர்ந்ததோடு மேலும் அவர் குறிப்பிடுகையில்.,  "எங்களை ஆசீர்வதித்த ஹரியானா மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அதே வைராக்கியத்துடனும் அர்ப்பணிப்புடனும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். கடின உழைப்பாளிகளின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன், ஹரியானா காரியகார்த்தாஸ் விரிவாக உழைத்து மக்களிடையே சென்று எங்கள் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை விரிவாகக் கூறினார்,” என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக தலைவர்களின் இந்த பதிவு, தற்போது மக்களின் கவனத்தை தன் பங்கம் ஈர்த்துள்ளது.