TN Election 2021 Live: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 க்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) தலைவர் வைகோ புதன்கிழமை வெளியிட்டார். மதிமுக அறிக்கையானது சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான கட்சிகளின் வாக்குறுதிகளும் வந்துவிட்ட நிலையில், தற்போது இந்த வாக்குறுதிகள் குறுத்த விமர்சனங்களும் பரவலாக உள்ளன. இல்லத்தரசிகள், முதியவர்கள், அரசாங்கப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியடையச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் பெயர் இடம் பெறவில்லை. புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 15 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முதல் பட்டியலில் ஏனாம் தொகுதியைத் தவிர 14 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.
Latest Updates
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 க்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) தலைவர் வைகோ புதன்கிழமை வெளியிட்டார். தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு, முழு மதுவிலக்கை கொண்டுவருவது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை, எட்டுவழிச் சாலை ரத்து என பல்வேறு அம்சங்கள் மதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மதிமுக அறிக்கையானது சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மேலும் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணும் பாஜக, இம்முறை முன்னெப்போதும் இல்லாத முனைப்புடனும் நம்பிக்கையுடனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் அங்கு பல பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசுகையில், “அரவக்குறிச்சி மக்கள் பொய் பேசும் வேட்பாளரையும் பார்த்து விட்டார்கள், உண்மை பேசும் வேட்பாளரையும் பார்த்து விட்டார்கள். 3 செண்ட் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற வேட்பாளரையும் பார்த்தீர்கள். அரவக்குறிச்சி தொகுதி மக்களின் வாழ்க்கை எத்தனை ஆண்டு்காலம் இப்படியே இருப்பதற்கு அனுமதிப்பீர்கள். அரவக்குறிச்சியில் தொழிற்சாலை எதுவுமில்லை; படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள். கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். மத்திய பாஜக ஆட்சியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் உள்ளது." என்றார். மேலும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என ABP CVoter கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது அதிமுக-பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று கூறுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணி 43% வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று ABP CVoter கருத்துக் கணிப்பு கூறுகிறது.
அதிமுக (AIADMK) தலைமையிலான கூட்டணி 30.6% வாக்குகளுடன் 53 முதல் 61 தொகுதிகளையே பெற வாய்ப்பு உள்ளது என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.புதுச்சேரியில் அதிமுக - பாஜக இடையேயான தொகுதி பங்கீடு இறுதியானது. அதிமுக 5 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக ஐந்து இடங்களில் போட்டியிடுகின்றன. அதிமுக வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது.
தமிழகத் தேர்தலுக்கான 4 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது
ஏற்கெனவே 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேளச்சேரி, விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இதில் விளவங்கோடு தொகுதி விஜயதாரணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது