தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான கட்சிகளின் வாக்குறுதிகளும் வந்துவிட்ட நிலையில், தற்போது இந்த வாக்குறுதிகள் குறுத்த விமர்சனங்களும் பரவலாக உள்ளன. இல்லத்தரசிகள், முதியவர்கள், அரசாங்கப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியடையச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிமுக-வுடன் (AIADMK) கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணும் பாஜக, இம்முறை முன்னெப்போதும் இல்லாத முனைப்புடனும் நம்பிக்கையுடனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் அங்கு பல பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசுகையில், “அரவக்குறிச்சி மக்கள் பொய் பேசும் வேட்பாளரையும் பார்த்து விட்டார்கள், உண்மை பேசும் வேட்பாளரையும் பார்த்து விட்டார்கள். 3 செண்ட் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற வேட்பாளரையும் பார்த்தீர்கள்.
அரவக்குறிச்சி தொகுதி மக்களின் வாழ்க்கை எத்தனை ஆண்டு்காலம் இப்படியே இருப்பதற்கு அனுமதிப்பீர்கள். அரவக்குறிச்சியில் தொழிற்சாலை எதுவுமில்லை; படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள். கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். மத்திய பாஜக ஆட்சியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் உள்ளது.
10 வருடங்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மூன்று மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். அந்த வேலையை விட்டுவிட்டு அடித்தட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த முறை பொய் பேசிய நபருக்கு வாக்களித்தீர்கள். இந்த முறை உண்மை பேசும் எனக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியைப் (BJP) பொறுத்த வரை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை தமிழகத்தில் அவர்களது இருப்பும் ஆதரவும் செல்வாக்கும் அதிகரித்துள்ளது என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சமீக காலங்களில் பல முக்கிய புள்ளிகளும், திரைத் துறை பிரமுகர்களும் பாஜக-வில் சேர்ந்ததை நாம் பார்த்தோம். தேசியக் கட்சியாக இருப்பதால், இக்கட்சியின் முக்கிய ஆளுமைகள் தேசியத் தலைவர்களாகவே இருந்து வந்தனர்.
எனினும், இந்த தேர்தல்களில் (TN Assembly Election) அந்த நிலை மாறி, தமிழகத்தின் பல பிரபலங்களின் மூலம் பாஜக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. இந்த தேர்தல், பாஜக-வைப் பொறுத்தவரை, ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என கூற முடியாது என்றாலும், கண்டிப்பாக, முன்பை விட அதிக வாக்கு சதவீதத்தையும் அதிக தொகுதிகளையும் இக்கட்சி பெறும் என நம்பப்படுகின்றது.
ALSO READ: TN Elections 2021: தமிழகதில் ஏப்ரல் 6 ஆம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு:
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR