நேரு, இந்திராக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த 3-வது PM மோடி..!!
ஜவஹர்லால் நேரு, இந்திராவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறை ஆட்சியமைக்கும் 3-வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்!!
ஜவஹர்லால் நேரு, இந்திராவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறை ஆட்சியமைக்கும் 3-வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்!!
நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்று இரவுக்குள் தேர்தல் முடிவு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து சுமார் 350 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.
முன்னதாக, கடந்த 2014 தேர்தலில் பாஜக கூட்டணி 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி பிரதமரானார். தற்போது அவர் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் 3 ஆவது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒரே ஒரு வித்தியாசம் நேருவும், இந்திராவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், மோடி பாஜக-வை சேர்ந்தவர்.
1951 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் மக்களவைத் தேர்தலில் ஜவஹர்லால் நேரு நான்கில் 3 பங்கு வாக்குகள் பெற்று நாட்டின் முதல் பிரதமரானார். அதன்பிறகு 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் நேரு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். அதேபோல், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 352 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இந்திரா தலைமையிலான கட்சி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.