குஜராத் காங்கிரஸ் MLA-க்கள் 15 பேர் விரைவில் கட்சியில் இருந்து விலக உள்ளதாக அக்கட்சியில் இருந்து விலகிய அல்பேஷ் தாக்கோர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்க்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்தி ஹார்திக் படேல், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கோர் போன்ற இளம் தலைவர்கள் பிரபலம் அடைந்தனர். இவர்களில் அல்பேஷ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேவானி சுயேட்ச்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி கண்டவர். பின்னர் மக்களவை தேர்தல் சமயத்தில் ஹார்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


அதே வேளையில் காங்கிரஸ் கட்சியில்இருந்து அல்பேஷ் தாக்கோர் விலகினார். இவருடன் காங்கிரஸ் MLA-க்கள் தவல்சின் தாக்கோர், பரத்ஜீ தாக்கோர் ஆகியோரும் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகினர். இதற்கிடையில் அல்போஷ் குஜராத் துணை முதல்வர் நிதின் படேலை சந்தித்து பேசினார்.



இதனால் அவர் விரைவில் பாஜக-வில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை மறுத்த அப்பேஷ், தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 15 MLA-க்கள் விலக கூடும் என அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் "எனது தொகுதி தொடர்பான பிரச்சனைக்காகவே பாஜக தலைவர்களை சந்தித்து வருகிறேன், அந்த கட்சியில் இணையும் திட்டம் ஏதும் இல்லை" என தெரிவித்துள்ளார்.


மேலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏழ்மையில் தவித்து வருகின்றனர், அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளேன். குஜராத் காங்கிரஸ் MLA-க்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இன்னும் 15 MLA-க்கள் வரை விரைவில் அக்கட்சியில் இருந்து விலக கூடும் எனவும் அவர தெரிவித்துள்ளார்.