மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், ராஜ்ய சபா எம்.பியுமான நாராயண ரானே, பாஜக-வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவசேனா கட்சியை சேர்ந்த ராயாயண ரானே, மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார், மேலும் சிவசேனா சார்பில் எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்தவர். பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முறன்பாடு காரணமாக கடந்த 2005 ஜூலை மாதம் சிவசேனா கட்சியில் இருந்து விலகினார்.


அப்போது தான் கட்சியில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணமாக, அப்போதைய கட்சி தலைமை உத்தவ் தாக்கரே அவர்களுடனான கருத்து வேறுபாடு தான் என தகவல்கள் தெரிவிக்கின்றது. சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே-வுக்கு பக்கபலமாய் நின்று, கட்சியின் முன்னேற்றத்திற்கு பாடுப்பட்ட அவர், தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனாவில் இருந்து விலகினார். விலகலை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.


காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும், காங்கிரஸ் கட்சியிலும் பல முக்கிய பதவிகளை வகித்தவர் ரானே என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் தனது வேலைகளை விட செய்திகளில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தினார். தற்போது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதால், டெல்லி சென்று சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவை இருந்தது. இதனையடுத்து, செப்டம்பர் 2017-ல், ரானே காங்கிரஸிலிருந்து வெளியேறி தனது கட்சியை (மகாராஷ்டிரா சுவாபிமன் பக்ஷா) உருவாக்கினார். 


இந்நிலையில் தற்போது,  2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், நாராயண் ரானே தனது சொந்த கட்சியை பாஜகவுடன் இணைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.