காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்துள்ளர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, டெல்லியில் கடந்த 25ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக கூறியதாகவும், அதற்கு அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் மறுத்ததாகவும் கூறப்பட்டது. 


அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார். இதையடுத்து, தற்போது ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி திட்டவட்டமாக இருப்பதாக கூறியுள்ளார். 


இதன் தொடர்ச்சியாக, இன்று டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடந்தது. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கலந்துகொண்டனர். அப்போது நாடாளுமன்ற குழு தலைவர் பதவியையும் ராகுல் ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. 



இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 52 பேர் மக்களவை உறுப்பினர்களாக தேர்வாகினர். இதையடுத்து இவர்களுக்கான முதல் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் உள்ள மைய அறையில் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாகாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.