சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2021) வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதியும் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி பெறும் முனைப்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேசமயம், தேர்தலில் மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறியும் பொருட்டு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு (TN Election Opinion Poll 2021) முடிவுகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. டைம்ஸ் நவ் சி வோட்டர்  திமுக தலைமையிலான கூட்டணி அதிமுகவை வீழ்த்தி  கைப்பற்றும் என்றும், திமுக-காங்கிரஸ் கூட்டணி 177 இடங்களையும், அதிமுக-பாஜக கூட்டணி 49 இடங்களையும் வெல்லக்கூடும் என்று கணித்துள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 3 இடங்களையும், டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 3 இடங்களையும்,பிற கட்சிகள் 2  இடங்களையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.


சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு (M.K. Stalin)  43.1 சதவீதமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 29.7 சதவீதமும், சசிகலாவை 8.4 %, கமல் ஹாசனை 4.8 % ஆதரித்துள்ளனர். கொங்கு மண்டல பகுதிகளில் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கு , மொத்தமுள்ள 52 தொகுதிகளில் 12 தொகுதிகளை அதிமுக கூட்டணியும், மீதமுள்ள 38 இடங்களை திமுக கூட்டணியும் கைப்பற்றும் என்றும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.


ALSO READ |  TN Election 2021: வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தவறு செய்துவிட்டதா அதிமுக?


ஏபிபி சி வோட்டர் நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, திமுக (DMK) தலைமையிலான கூட்டணி 161-169 இடங்களையும். அதிமுக  கூட்டணி 53-61 இடங்களையும்  வெல்லக்கூடும். மக்கள் நீதி மய்யம் சுமார் 2-6 இடங்களைப் பெறும். அமமுக 1-5 இடங்களைப் பெறலாம் என்று கூறி உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 41.1 சதவீதம் வாக்குகளைப் பெற்று (158 முதல் 166 தொகுதிகளில் வெற்றி பெறக் கூடும்) முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் அஇஅதிமுக (AIADMK) தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி (என்.டி.ஏ) 28.7 சதவீதம் வாக்குகளைப் பெற்று (60 முதல் 68 தொகுதிகளில் வெற்றி பெறக் கூடும்) இரண்டாவது இடத்தில் உள்ளது. 


மற்ற கட்சிகள் 15.7 சதவீதம் வாக்குகளுடன் (0 முதல் 4 இடங்களில் வெற்றி பெறக் கூடும்) மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என தெரிய வந்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்தவரை திமுக-வின் மு.க. ஸ்டாலின் 36.4 சதவீதம் வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மிகவும் விரும்பப்படும் முதலமைச்சர் வேட்பாளராக உருவெடுத்துள்ளார், அதற்கு அடுத்தபடியாக தற்போதைய முதலமைச்சரான அஇஅதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) 25.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.


ALSO READ |  5 முதல்வர் வேட்பாளர்கள் - 5 முனை போட்டி: யாரு தாங்க வரபோறாங்க.. நீங்களே சொல்லுங்க மக்களே..!


ஜூனியர் விகடன் டீம் நடத்திய சர்வேபடி, திமுக தலைமையிலான கூட்டணி 163 இடங்களையும். அதிமுக  கூட்டணி 52 இடங்களையும்  வெல்லக்கூடும். மக்கள் நீதி மய்யம் ஒரு இடமும்,  18 இடங்களில் இழுபறி இருக்கும் என கூறியுள்ளது. அதேபோல புதிய தலைமுறை தொலைகாட்சி நடத்திய கருத்து கணிப்புபடி, திமுக கூட்டணி 151-158 இடங்களையும், அதிமுக கூட்டணி 76-83 இடங்களையும் வெல்லும் எனத் தெரிவித்துள்ளனர். 


தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.36 கோடி ஆகும். அதில் ஆண் வாக்காளர்கள் 3.8 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.18 கோடி பெரும் உள்ளனர். புள்ளி விரவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்தமுறை பெண் வாக்காளர்கள் மிகவும் அதிகம்.


தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், திமுகவின் ஆ.ராசா முதல்வர் குறித்த சர்ச்சை பேச்சு, பிஜேபி கூட்டணி சர்ச்சை என இரண்டு பக்கங்களிலும் மாறி மாறி சம்பவங்கள் நடப்பதால், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆவல் எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பு மக்கள் கருத்தோடு ஒத்துபோகுமா என்று மே 2 வரை காத்திருக்க வேண்டும்.


ALSO READ |  வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR