சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் வரும் 28 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட 13 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் , ஆம்பூர் ஓசூர், திருவாரூர், தஞ்சாவூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 13 தொகுதிகளை தி.மு.க வேட்பாளர்கள் கைப்பற்றினர்.


இந்த 13 எம்.எல்.ஏக்களும் வரும் 28 ஆம் தேதி பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதிவி ஏற்கவுள்ளனர்.


13 வேட்பாளர்களின் வெற்றியின் மூலம் , சட்டமன்றத்தில் 101 எம்.எல்.ஏக்களுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கிறது தி.மு.க. கூட்டணிக் கட்சிகளோடு சேர்த்து மொத்தம் 110 எம்.எல்.ஏக்கள் பலம் இருக்கிறது.