TN Election 2021: மதுவிலக்கை அமல்படுத்துவதே இலக்கு என தேர்தல் அறிக்கையில் கமலஹாசன் சூளுரை
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற பெயரில் கமலஹாசன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியன்று நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற பெயரில் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய சாரம்சங்கள்:-
தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கை அமல்படுத்துவதே முக்கிய இலக்கு.
தமிழ்மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி, ஒரு வருடத்தில் ஆங்கில மொழி புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு.
மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசியல் மற்றும் சட்ட வழிமுறைகளை பின்பற்றி அதை நனவாக்கும் கூட்டணி அரசை மத்தியில் உருவாக்குவோம்.
தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுக்கு இணையான நாடாக்குவோம்.
Also Read | 13 வயது மாணவரை வலுக்கட்டாயமாக மணந்து முதலிரவு கொண்டாடிய ஆசிரியை!
இடம் ஒதுக்கீடு பெறுவோரின் வாழ்வாதாரம் உயரும் வரை இடம் ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படும்.
கடனில்லா தமிழகம், வரிகுறைப்பு, நீடித்த வளர்ச்சி, வரிக்கு நிகரான வருமானம்.
மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்.
ஊழலற்ற, நேர்மையான மக்களாட்சி
விவசாயம் தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை உறுதி செய்வது.
தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
Also Read | Instagram Filter போல தோற்றமளிக்க 30 லட்சம் ரூபாய் செலவு!
விவசாயம், இயற்கையும், அறிவியலும் சார்ந்த நிரந்தரப் பசுமைப் புரட்சி, விவசாய பொருட்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் ஏற்றுமதி வரை உலக சந்தை மயமாக்கல், அடர்காடுகள் வளர்க்கப்படும்.
மீனவர்களின் வாழ்வாதார மேம்படுத்தப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்பு மூலம் பொருளாதார வளர்ச்சி.
நதி நீர் இணைப்பு அதிதிறன் நீர்வழிச்சாலை, நீர் நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் நீலப்புரட்சி
கிராமப்புற சுய சார்பிற்கும், தொழிலுக்கும், விவசாயத்திற்கும் மதிப்பு கூட்டுதல்
ஏற்றுமதிக்கும், வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும், ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம்
Also Read | நீட் தேர்வு குறித்து மக்களிடம் மீண்டும் மீண்டும் பொய் கூறுகிறார் ஸ்டாலின்
அரசு பள்ளிகல்வி உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும். அடிப்படை கல்வி, சீர்த்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைக்கல்வி 9-10 வரை சீர்திருத்தம் செய்யப்படும். 1.3 கோடி பேருக்கு உலக தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு
உயர்கல்வி- உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றம், உலகத்தோடு போட்டி போடும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்.
தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ‘SEET’ தேர்வு
Also Read | பாஜகவின் வியூகம்; பிரச்சாரத்திற்காக தமிழகம் நோக்கி படை எடுக்கும் நட்சத்திர தலைவர்கள்
அனைவருக்கும் உலக தரம் வாய்ந்த மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவ கல்வி
சுற்றுப்புற சூழலுக்கேற்ற தொழில்துறை மேம்பாடு, மாசுபடுத்தும் 185 ஆலைகள் முற்றிலும் மாசில்லா ஆலைகளாக மாற்ற உறுதி செய்யப்படும்.
நட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்க அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதி, மத வேறுபாடில்லா மக்களாட்சி அமைப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மதத்தின் பெயரால் குடியுரிமை மறுப்பை முற்றிலும் எதிர்ப்போம். ஈழத்தமிழ் அகதிகளாக வந்தோருக்கு குடியுரிமை வலியுறுத்துவோம்.
Also Read | Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை, SMS மூலம் தரவுகள் திருட்டு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR