Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை: SMS மூலம் தரவுகள் திருட்டு

உங்கள் உங்கள் மொபைல் தொலைபேசிகளிலிருந்து தரவைத் திருட ஹேக்கர்கள் புதிய முறையை கையாள்கின்றனர். எஸ்எம்எஸ் பயன்படுத்தி தரவுத் திருட்டு நடைபெறுவதை சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

உங்கள் ஸ்மார்ட்போன் எந்த ஹேக்கர்களிடமுக்ம் மாட்டிக் கொள்ளவில்லை என்று நினைத்தால் அது உங்கள் அறியாமை தான். எப்போதும், மொபைலும், அதில் இருக்கும் தரவுகளும் திருடப்படலாம் என்ற அச்சுறுத்தல்கள் தொடர்கிறது என்பதை நிரூபிக்கிறது அண்மையில் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் வெளியிட்டத் தகவல். புதிய தாக்குதலின் ஆபத்து எப்போதும் பதுங்கிப் பாய்கிறது.  உங்கள் மொபைல்களிலிருந்து தரவைத் திருட ஹேக்கர்கள் எஸ்எம்எஸ் பயன்படுத்தும் புதிய முறையை கண்டறிந்திருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

Also Read | 7th Pay Commission New updates: இந்த தேதியில் இருந்து DA, DR சலுகைகள் கிடைக்கும்

1 /4

நிபுணர்களின் கூற்றுப்படி, ஹேக்கர்கள் சைபர் தாக்குதலுக்காக வணிக நோக்கங்களுக்காக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை (SMS) பயன்படுத்துகின்றனர். தரவைத் திருட இந்தவைகளில் உள்ள ஓட்டைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

2 /4

தொலைதொடர்பு துறையின் அலட்சியம் தான் இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.  

3 /4

முக்கியமான எழுத்துப்பூர்வமான செய்திகளை திருப்பிவிட ஹேக்கர்கள் பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்துகின்றனர், இதில் OTP அல்லது வாட்ஸ்அப் போன்ற சேவைகளுக்கான உள்நுழைவு இணைப்புகள் உள்ளன.  

4 /4

Motherboard நிருபர் ஜோசப் காக்ஸ் (Joseph Cox) புதிய அச்சுறுத்தலை அம்பலப்படுத்தினார். இதற்காக அவர் தனது தனிப்பட்ட எண்ணில் தாக்குதல் நடத்த ஒரு ஹேக்கரை அனுமதித்தார். ஹேக்ஸ் தனது ஸ்மார்ட்போனில் வந்து சேர வேண்டிய எஸ்எம்எஸ் மற்றும் தரவுகளை இடைமறிக்க முடிந்தது என்பதை கண்டறிந்தார். ஹேக்கர்கள் தாக்குதலை மேற்கொண்டதை, சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துக் கொள்வது கூட கடினம் என்று அவர் சொல்கிறார்.