தளி தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரனை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆதரிக்க காரணம் என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா எல்லையை ஒட்டிய இந்த தொகுதியில் உள்ளது தளி (தனி) சட்டமன்ற தொகுதி. இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவும், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட்டும் களம் இறங்கி உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா எல்லையை ஒட்டிய இந்த தொகுதியில் உள்ளது தளி (தனி) சட்டமன்ற தொகுதி. இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவும், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட்டும் களம் இறங்கி உள்ளன.
தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி (தனி) சட்டமன்ற தொகுதி லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் தளி தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் 6 எம்எல்ஏக்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.
அவர்களுடன் தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் தளி மற்றும் தேன்கனிக்கோட்டையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Also Read | #WATCH கமலஹாசனை தோற்கடிக்க, ஸ்மிருதி இரானியின் இந்த ஆட்டம் போதுமா?
தேர்தல் பிரசாரத்தில் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்ற வைக்க அனுமதிக்காதது போல, இந்த தேர்தலிலும் பாஜகவை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினால் மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் போட்டியிடும் 23 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர்.
பாரதிய ஜனதா அண்ணா திமுக கூட்டணி மக்கள் விரோத கூட்டணி இந்த கூட்டணியை வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடைந்து ஸ்டாலின் முதலமைச்சராக வந்து, மக்களுக்கான பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துவார் என்றும் சித்தராமையா கேட்டுக்கொண்டார்.
Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR