கோவை: கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜக தொண்டர்களுடன் கோலாட்டம் ஆடி அசத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான பிரசாரங்கள் மும்முரமாக இருக்கும் நிலையில் நட்ச்த்திர வேட்பாளர்களும், முக்கியமான தொகுதிகளும் களை கட்டியுள்ளன. கோவை (Coimbatore) தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், உலக நாயகன் என உலகம் அறிந்த நடிகருமான கமல்ஹாசன் (Kamal Hassan) போட்டியிடுகிறார்.
அனைவராலும் உன்னிப்பாக கவ்னிக்கப்படும் இந்தத் தொகுதியில் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக, பாஜக தலைமையில் இருந்து பல முக்கியத் தலைவர்கள் கோவைக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read | ஜெயலலிதாவின் ஆலயத்தில் பிரகார தெய்வங்களாக பாஜக தலைவர்கள்
பிரபலமான இந்தி பாடலுக்கு, வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் ல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாரம்பரிய (Traditional) கோலாட்டம் ஆடினார்கள்.
#WATCH Coimbatore: Union Minister Smriti Irani performs traditional dance* with BJP workers, as a part of election campaigning for Vanathi Srinivasan, the party's candidate from Coimbatore South constituency.#TamilNaduElections pic.twitter.com/1S6zQF2RgL
— ANI (@ANI) March 27, 2021
கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை வெற்றிப் பெற செய்யும் நோக்கில் கோயம்புத்தூர் வந்துள்ள ஸ்ம்ருதி இரானியுடன் இணைந்து கட்சித் தொண்டர்கள்களும் கோலாட்டம் ஆடி (Dance) அசர வைத்துள்ளார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அதிக வரவேற்பைப் பெறவும், வேட்பாளர்களும் நட்சத்திரப் பேச்சாளர்களும் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கமலஹாசனுக்கு எதிராக களம் இறங்கியிருக்கும் பாஜகவின் வானதி சீனிவாசன், தனது பிரச்சார உத்திகளையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறார். மக்களோடு மக்களாக களம் இறங்கி. மாட்டு வண்டி ஓட்டுவது, பேட்மிட்டன் ஆடுவது, செல்பி எடுப்பது என்று பொதுமக்களுடன் கலது பழகி வருகிறார்.
கோவை தெற்கு தொகுதிக்கு பிரசாரத்திற்கு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் இணைந்து இந்தி பாடலுக்கு கோலாட்டம் ஆடிய வானதியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR