TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா
மேற்கு வங்க மாநில தேர்தல் முடிவுகளில் ஆளும்கட்சியின் திரிணாமுல் காங்கிரஸ் முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் முன்னிலை பெற்றிருந்தாலும் அது தொடக்கநிலை மாயதோற்றமே என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறுகிறார்.
West Bengal Election Result 2021: மேற்கு வங்க மாநில தேர்தல் முடிவுகளில் ஆளும்கட்சியின் திரிணாமுல் காங்கிரஸ் முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் முன்னிலை பெற்றிருந்தாலும் அது தொடக்கநிலை மாயதோற்றமே என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறுகிறார்.
மேற்கு வங்க மாநிலத்தின் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் இரு சுற்றுகளுக்குப் பிறகு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 176 இடங்களி்ல் முன்னிலை பெற்றுள்ளது, பாஜக 87 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைந்துள்ளார்.
Also Read | பின்னடையும் முன்னணி நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல்
முதல் இரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக பின்தங்குவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா, இதுவொரு மாயத்தோற்றமே என்று பொருள்படும்படி கருத்து தெரிவித்தார்.
“ தொடக்கத்தில் வரும் 2 சுற்று முடிவுகளை வைத்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது. இது தேர்தல் இறுதி முடிவுகள் அல்ல. தபால் வாக்குகள் எல்லாம் இறுதி வாக்குகளாகக் கருத முடியாது. இன்று மாலைக்குள் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெறுவோம்” என்று விஜய் வர்கியா தெரிவித்தார்.
அப்போது, திதீ என்னும் மமதா பேனர்ஜியின் பின்னடைவும் மாயத்தோற்றம் தானோ?.
ஆனால் மேற்கு.வங்கத்தில் நிச்சயமாக பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக சொல்கிறார் வர்கியா. .கடந்த தேர்தலில் 3 இடங்களைப் பிடித்த பாஜக, இந்த தேர்தலி்ல் ஆட்சி அமைத்துவிட முடியும் என்று நம்புகிறது.
இன்னும் சில மணித்துளிகளில் மாயத்தோற்றம் எது? நிதர்சனத்தில் ஆட்சி அதிகாரம் யாருக்கு என்பது தெரிந்துவிடும்...
கானல்நீர் தெளிவாக இன்னும் சற்று பொறுத்திருந்தால் போதும்!!! மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க அறுதி பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 148 ஆகும்.
Also Read | மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR