West Bengal Election Result 2021: மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை நந்திகிராம் தொகுதி நட்சத்திர தொகுதியாக உருவாகி உள்ளது. மேற்கு வங்காளத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தவுடன், நாடு முழுவதும் நந்திகிராம் தொகுதி குறித்து அதிகம் பேசப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால், நந்திகிராம் பரபரப்பான தொகுதியாக மாறியுள்ளது. இந்த தொகுதியை கைபற்ற திருணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது.
தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும், இந்த தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
தற்போது முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூரி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த 2 முறையும் பவானிபூரி தொகுதி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இந்த முறை நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிட்டார்.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். அவர் முன்னிலை வகிக்கிறார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருகிறது. 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபையில் 200 இடங்களை வெல்லுவோம் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக நடைபெற்ற சட்டசபை தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி முடிவடைந்தது. மேற்கு வங்காளம் மொத்த 294 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 148 ஆகும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR