ஒருவழியாக மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவு படுத்தினார் உத்தவ்!
சிவசேனா தலைவர் முதல்வரான பதினைந்து நாட்களுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம் அமைச்சர்களின் பதவிகளை அறிவித்தது.
சிவசேனா தலைவர் முதல்வரான பதினைந்து நாட்களுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம் அமைச்சர்களின் பதவிகளை அறிவித்தது.
மகாராஷ்டிரா அரசாங்கத்தில் நிதி, வீட்டுவசதி, பொது சுகாதாரம் மற்றும் கூட்டுறுவு சங்கள் அமைச்சகங்களை தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP)-க்கு ஒதுக்கப்பட்டுள்ள அதே வேளையில் அவரது கட்சி உள்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்களை தங்கள் வசமாக்கியுள்ளது.
சிவசேனா மற்றும் NCP ஆகியவை முறையே 15 மற்றும் 16 அமைச்சர்களைக் கொண்டிருக்கின்றன, காங்கிரசுக்கு 12 அமைச்சர்கள் இருப்பார்கள் என்று ஆளுநருக்கு அனுப்பிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, உள்துறை, நகர அபிவிருத்தி, சுற்றுச்சூழல், பொதுபல சேனா, சுற்றுலா மற்றும் நாடாளுமன்ற பணிகள் இலாகாக்களைப் பெற்றார், அதே நேரத்தில் NCP-யின் சாகன் பூஜ்பால் கிராம அபிவிருத்தி, சமூக நீதி, நீர்வளம் மற்றும் மாநில கலால் இலாகாக்களைப் பெற்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரத்துக்கு வருவாய், பள்ளி கல்வி, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இலாகாக்களும், NCP-யின் ஜெயந்த் பாட்டீலுக்கு நிதி மற்றும் திட்டமிடல், வீட்டுவசதி, உணவு வழங்கல் மற்றும் தொழிலாளர் இலாகாக்களும் கிடைத்துள்ளன.
சிவசேனாவின் சுபாஷ் தேசாய் தொழில், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர், வேலைவாய்ப்பு இலாகாக்கள் மற்றும் காங்கிரஸின் நிதின் ரவுத் ஆகியோருக்கு PWD பழங்குடி வளர்ச்சி, OBC வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு இலாகாக்களைப் பெற்றார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆறு நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் 2019 டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 21, 2019 வரை நாக்பூரில் நடைபெற உள்ளது. சட்டமன்ற அமர்வுக்கு முன்னதாக, அமைச்சரவை குறித்த கடிதத்தினை முதல்வர் அலுவலகம் ஆளுநர் மேசைக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி ஆட்சி அமைத்து உள்ளது. இதில், சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, மகா விகாஷ் முன்னணி சார்பில் காங்கிரஸ் MLA நானா பட்டோலே சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நானா பட்டோலே பாஜக MP-யாக பதவி வகித்தவர். நாடாளுமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதா தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார். இவர் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சகோலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.