வேலூர் மக்களவைத் தேர்தல் 2019: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
வேலூர் மக்களவைத் தேர்தலில் 28 பேர் போட்டியிட இருப்பதாக இறுதி வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது!!
வேலூர் மக்களவைத் தேர்தலில் 28 பேர் போட்டியிட இருப்பதாக இறுதி வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது!!
நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு பரிசீலனை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளார் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் தீப லட்சுமி உள்ளிட்ட 31 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனிடையே, வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான இன்று 3 பேர் மனுவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மக்களவைத் தேர்தலில் 18 சுயேச்சைகள் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், 179 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.