காங்கிரசின் ஊழல்களால் மகாராஷ்ட்ரா சீரழிந்து விட்டது: PM மோடி
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி என பிரதமர் மோடி கடுமையாக குற்றச்சாட்டி உள்ளார்!!
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி என பிரதமர் மோடி கடுமையாக குற்றச்சாட்டி உள்ளார்!!
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பா.ஜனதா - சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அகோலா என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி என்றார்.
இந்த கூட்டணி 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து மகாராஷ்டிரா மாநிலத்தை சீரழித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்தது குறித்து காங்கிரஸ் கூட்டணியினர் மகாராஷ்டிரா தேர்தலில் பிரச்சினை எழுப்புவது மிகவும் அவமானகரமானது என்று அவர் குறிப்பிட்டார்.
ரயில்கள், பேருந்துகள் மற்றும் பிற நிறுவனங்களை குறிவைத்து மகாராஷ்டிராவில் 1993 ஆம் ஆண்டு வெடிகுண்டு வெடித்தது உங்களுக்கு நினைவிருக்கிறது. குற்றத்தின் முக்கிய குற்றவாளி எதிரி நாட்டிற்குள் தப்பினர். அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை நாம் அனைவரும் அறிய விரும்புவதால், புதிய வெளிப்பாடுகள் படத்தை அழிக்கின்றன. அனைவருக்கும் யார், அவர்களுடன் என்ன வகையான வணிக உறவுகள் இருந்தன எனபாத்து விரைவில் தெரிய வரும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், காஷ்மீர் விவகாரம் மகாராஷ்டிரா தேர்தலில் எந்தவிதத்திலும் பாதிக்காது என்ற அவர், வீர சாவர்க்கர் இந்த நாட்டுக்காக பெரும்பாடுபட்டவர் என்றார். தேசியத்தை ஊக்குவித்த அவர், பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று மோடி தெரிவித்தார்.