தமிழகத்தில் பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மொத்தம் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த வருடம் முதன் முதலாக ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. 


> ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.annauniv.edu/tnea 2018 எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 


> இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று இலவசமாக பதிவு செய்யலாம். 


> ஆன்-லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 


> பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க தேவையில்லை. தேர்வு முடிவு வந்தபிறகு அரசு தேர்வுத்துறையில் இருந்து சி.டி., அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படும். 


> சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டும் தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும். 


> இதற்கு கடைசி நாள் 30-ம் தேதி ஆகும்.