இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம் மூலமாக பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மொத்தம் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த வருடம் முதன் முதலாக ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. 


இந்நிலையில் இந்த ஆண்டு முதல், அண்ணா பல்கலைக்கழகம் இன்ஜினியரிங் கலந்தாய்வை, ஆன்லைனில் நடத்துகிறது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்தல் மே 3ம் தேதி தொடங்கியது. 


ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 2ம் தேதியான இன்று வரை நீட்டிக்கப்பட்டது. 


இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு நேற்று மாலை வரை இணையதளம் மூலம் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோரும், இணைய சேவை மையங்கள் மூலம் 12,000க்கு மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம் மூலமாக பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும். 


> ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.annauniv.edu/tnea 2018 எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 
> இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று இலவசமாக பதிவு செய்யலாம். 
> ஆன்-லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.