இன்றைய (06-07-2018) முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

> மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு


பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


> ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது: மலேசிய பிரதமர்!


ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற முடியாது என்று மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது தெரிவித்து உள்ளார்.


> சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது- மதுரை ஐகோர்ட்


நீட் தேர்வை நடத்துவதில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் இன்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.


> உத்தரப்பிரதேசத்தில் வரும் 15 முதல் பிளாஸ்டிக்குத் தடை!


உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதாக அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 


> 2019 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கு தடை: அரசாணை வெளியீடு!


அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடைக்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.


> தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!


தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து!


> மகாராஷ்டிராவில் தடம் புரண்ட மதுரை எக்ஸ்பிரஸ்!


மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவை நோக்கி சென்று கொண்டிருந்த மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


> வழக்குகள் ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே: சுப்ரீம் கோர்ட் 


சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கே உள்ளது என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


> 8 வழிச்சாலை: நிலம் கையகபடுத்த தடையில்லை- சென்னை கோர்ட்


சென்னை - சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை  திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. 


> சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!


சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


> வேலைக்கு லீவு! ஊழியரை சவுக்கால் அடித்த உரிமையாளர்- வீடியோ!


மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து வேலைக்கு வராமல் இருந்த ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 


> தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு!


ஜம்மு காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகள் கடத்தி சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 


> தமிழ் படம் 2! இந்த முறை சிக்கியது கீர்த்தி சுரேஷ்!​


தமிழ் படம் 2 ரிலீஸ் குறித்த அறிவிப்பு போஸ்டரில் நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி கொடுத்த போஸை கலாய்த்துள்ளனர்.


> Thailand cave rescue: மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர் பலி!


தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 கால்பந்து சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை காப்பாற்ற முயற்சித்த முன்னாள் கடற்படை முக்குளிப்பவர் உயிர் இழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


> ZEE5-ல் சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு! வெளியானது டிரைலர்!


ZEE5 இணையத்தில் வெளியாக உள்ள  பாலிவுட் பிரபலம் சன்னிலியோன் வாழ்க்கை வரலாற்றின் டிரைலர் வெளியாகியுள்ளது.


> இனி டிஜிட்டல் ஆதார், ஓட்டுனர் உரிம பயன்படுத்தலாம்: ரயில்வே


ரயிலில் பயணிப்பவர் டிஜிட்டல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை அடையாளமாக பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.


> 06-07-2018: இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!


சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை!!