தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு!

ஜம்மு காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகள் கடத்தி சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

Updated: Jul 6, 2018, 08:42 AM IST
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு!
Representational image

ஜம்மு காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகள் கடத்தி சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியை சேர்ந்த ஜாவித் அகமது போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். 

நேற்று இரவு வீட்டிலிருந்த ஜாவித் அகமதுவை தீவிரவாதிகள் சிலர் கடத்திச் சென்று விட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குல்காம் மாவட்டத்தின் பரிவான் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஜாவித் அகமது உடல் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். போலீஸ் கான்ஸ்டபிள் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.