தகவல் திருட்டு விவகாரம்: பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சி
பேஸ்புக் நிறுவனம் தகவல் திருடுவதாக தகவல் வந்ததையடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நேற்று முன் தினம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் "கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தியால் உலக முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.
இந்த குற்றச்சாற்று மூலம் ஒரே நாளில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இங்கிலாந்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் வரும் 26-ம் தேதிக்குள் முகநூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பேஸ்புக் தகவல் திருட்டு: மார்க் ஜூக்கர்பெர்க்கை எச்சரித்த மத்திய அரசு
இதையடுத்து, இந்திய தரப்பில் இந்திய தகவல் மற்றும் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், "தேவைப்பட்டால் தங்களுக்கு (மார்க் ஜுக்கர்பெர்க்) சம்மன் அனுப்பப்பட்டு இந்தியாவிற்கு வரவழைக்கப்படுவீர்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.