IPL 2018 தொடரின் முதல் தகுதிப்போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிப் பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


இத்தொடரின் முதல் குவாலிப்பையர் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. மும்பை மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து விளையாடியது.


இதனையடுத்து ஐதராபாத் அணி தரப்பில் ஷிக்கர் தவான் மற்றும் கௌசாமி தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே சென்னை வீரர்களில் பந்துவீச்சில் தினரிய ஐதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். கர்லோஸ் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்கமால் 29 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அணிக்கு சற்று பலம் சேர்த்தார். இந்நிலையில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்தது.


140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் வாட்சன் ரன்கள் ஏதும் இன்றி வெளியேற மற்றொரு தொடக்க வீரர் டூயூப்ளஷிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 67 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய போதிலும் டூயூப்ளஷிஸின் நிதனமான ஆட்டத்தால் சென்னை அணி ஆட்டத்தின் 19.1-வது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கினை எட்டியது.


இந்த வெற்றியின் மூலம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த ஐதரபாத் அணி, இரண்டாவது தகுதிப் போட்டியில் வெற்றிப்பெறும் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.