தென்னிந்திய நடிகை நிகிஷா பட்டேல், நடிகர் பிரபு தேவாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் பிரபு தேவா தனது மனைவியிடம் விவாகரத்து பெற்ற பின்னர் நடிகை நயன்தராவுடன் காதலில் இருப்பதாக தெரியவந்தது, பின்னர் அவர் நயன்தாராவுடனான தனது காதலை முறித்துக்கொண்டார்.


இதனையடுத்து திரைப்படங்களை இயக்குவதிலும், நடிப்பதிலும் பிஸியாக இருந்தார். இதற்கிடையில் அவர் வேறு ஒரு நடிகையுடன் காதல் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. 


இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் நிகிஷா பட்டேல், பிரபு தேவாவை திருமணம் செய்துகொள்ள தான் தயாராக இருப்பதாக தற்போது தெரிவித்துள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.


கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’ என்னும் படத்தில் நடிக்கும் நிகிஷா பட்டேல், அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நிருபர்களிடம் தெரிவிக்கையில் “தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருவதாகவும் இந்தி படங்களிலும் வாய்ப்பு வரும் நிலையில் முன்னணி நடிகர் ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன்” என கூறியிருந்தார்.


2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மொழியில் மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அவர் பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும் எனவும் பிரபுதேவாவுடன் நடிப்பதுபற்றி தன்னிடம் கேட்கிறார்கள் ஆனால் தான் அவரை திருமணம் செய்துகொள்ளவே தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் தெரிவித்த இத்தகவல்கள் சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.