இன்றைய வாழ்க்கை முறை மற்றும் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக, கழுத்து வலி என்பது ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் நடுத்தர வயதில் காணப்படும் ஒரு பொதுவான நிலைமையாக உள்ளது. கழுத்து வலியுடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள், கழுத்துத் தசைகளில் விறைப்புத் தன்மை, கழுத்தின் அசைவுகள் தடைபடுதல், கழுத்துப் பகுதியில் வலி, கைகள் மற்றும் தோள்களில் வலி, ஒற்றை தலைவலி ஆகியவை ஆகும். இதனை கவனிக்காமல் விட்டு விட்டால், நரம்பியல் ரீதியிலான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதிலிருந்து விடுபட, தசையை வலிமையாக்கக்கூடிய பயிற்சிகள் மிகவும் பலன் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கழுத்தை பின்ன்னோக்கி இழுக்கும் பயிற்சி


 அதற்கான பயிற்சியை செய்ய நீங்கள் நேராக நிற்க வேண்டும், அதன் பிறகு கழுத்தை முன்னோக்கி குனிந்து, பின்புறத்தை நோக்கி உங்கள் கழுத்தை உள்ளே இழுக்க வேண்டும். இதற்குப் பிறகு, 15 விநாடிகள் இந்த நிலையில் இருந்து 10 முறை செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் கழுத்து வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க


கழுத்தை வலது- இடது பக்கம் சாய்க்கும் பயிற்சி


இந்த பயிற்சியை செய்ய, நீங்கள் நேராக நிற்க வேண்டும், அதன் பிறகு முதலில் உங்கள் கழுத்தை இடதுபுறமாக சாய்த்து, பின்னர் அதே வழியில் வலதுபுறமாக சாய்க்கவும். இந்த பயிற்சியை 5 முதல் 8 முறை செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் கழுத்து, தோள்பட்டை வலியில் இருந்து விடுபடலாம்.


தோள்களுக்கான பயிற்சி


நேராக நின்று உங்கள் தோள்களையும் கழுத்தையும் நேராக வைத்திருங்கள். இதற்குப் பிறகு, உங்கள் தோள்களை வட்ட இயக்கத்தில் இயக்கவும். இதனை நீங்கள் 5 முதல் 8 முறை மீண்டும் செய்ய வேண்டும்.


கழுத்தை அசைக்காமல் பக்கவாட்டில் சாய்தல்


நேராக நின்று கொண்டு, உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேல் வைக்கவும். இப்போது கழுத்தை வளைக்காமல், மெதுவாக வலது பக்கம் வளைக்கவும். அதன் பிறகு, இயல்பு நிலைக்கு திரும்பவும். பின் இடது பக்கம் குனிந்து 10 முறை செய்யவும். இதன் மூலம், கழுத்து வலியிலிருந்து விடுபடலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ