தில்லியில் பயங்கரவாத தாக்குதல் (terror attack ) குறித்த உளவுத் தகவலை (Intelligence Report) தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிலை அறிவிப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய தலைநகர் தில்லியில் (Delhi), பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என, ஞாயிறன்று வெளியான  உளவு தகவலை அடுத்து,  காவல் துறையினர் தீவிர எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Also Read : இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை 4.25 லட்சத்தை தாண்டியது; இறப்பு எண்ணிக்கை 13,699


தில்லியில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கில், நான்கு அல்லது ஐந்து பேர் நுழையும் வாய்ப்பு உள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக, பிடிஐ(PTI) செய்தி வெளியிட்டுள்ளது.


இதை அடுத்து, தில்லியில் உள்ள 15 காவல் நிலையை பகுதிகளிலும் காவல் துறையினர் மற்றும் குற்றவியல் பிரிவினர், மற்றும் சிறப்பு நடவடிக்கை பிரிவினர், உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குறிப்பாக தில்லி எல்லை பகுதிகளில், சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர, சந்தை பகுதிகள்,  மருத்துவமனைகள் போன்ற இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Also read : கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான முதல் மருந்து... விரைவில் இந்தியாவில்!


தில்லியில், கொரோனா தொற்று நோய் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்கள் இன்னும் கட்டுபாட்டு மண்டலங்களாகவே உள்ளன. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் தில்லி, மும்பைக்கு அடுத்த படியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது வரை இங்கு 56,000 திற்கு அதிகமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  புதிதாக, சுமார் 3000 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இப்போது பயங்கரவாத தாக்குதல் சாத்தியகூறு இருப்பதாக கூறப்படுவது, அனைவரின் கவலையையும் அதிகரித்துள்ளது.


ஆனால், அரசின் தரப்பில் அனைத்து வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


மொழியாக்கம் : வித்யா கோபாலகிருஷ்ணன்