பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி துலுக்கவிடுதி அரசு பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம் வழக்கப்பட்டு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், அவர்களது பெற்றோருக்கு ரூ.1000 ஊக்கத்தொகையும் வழங்கி கிராம மக்கள் அசத்தி வருகின்றனர். 


தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பில் 10 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றன். பள்ளி முழுவதிலும் கணக்கெடுக்கையில் 80 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.


இந்த எண்ணிக்கையினை கூட்டும் முயற்சியில் அப்பள்ளி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து 1-ஆம் வகுப்பு முதல் 7-வகுப்பு வரையில் புதிதாக இணையும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், அவர்களது பெற்றோருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தது.


இந்த அறிவிப்பிற்கு பின்னர் இதுவரை 15 மாணவர்கள் பள்ளியில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின் மூலம் 50 மாணவர்களை கூடுதலாக இணைக்கும் பணியில் பள்ளி நிர்வாகம் முயற்சித்து வருகிறது.