Facebook, twitter நிறுவனங்களை அடுத்து தற்போது Google நிறுவனமும் தனது Chrome தளத்தில் இருந்து Cryptocurrency எனப்படும் இணையதள பணத்திற்கான விளம்பரங்களை நிறுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Cryptocurrency எனப்படுவது இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கண்ணுக்குத் தெரியாத பணம் ஆகும். இந்த பணத்தினை நேரடியாக பயன்படுத்த இயலாது, இணையத்தில் மட்டுமே பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும்.


உலகில் ஒவ்வொரு நாட்டிலும் அவரகளது பொருளாதார மதிப்பிற்கு ஏற்றவாரு நாணயங்களை அச்சடித்து பயன்படுத்திக் கொள்கின்றோம். இந்தியாவில் ரூபாய், அமெரிக்காவில் டாலர் என இருப்பது போல்.


இந்த அச்சிட்ட நாணயங்களுக்கான மதிப்பு நாட்டிற்கு நாடு மாறுபடும், ஆனால் இந்த Cryptocurrency மதிப்பானது இணைய நாணயம் என்பதால் உலகம் முழுவதும் ஒரே மதிப்பினை கொண்டிருக்கும். நாட்டிற்கு நாடு மாறுபடாது. இதனால் பெரும் புள்ளிகள் பலரும் தங்கள் கருப்பு பணத்தினை பயன்படுத்தி இந்த Cryptocurrency-களை வாங்க போட்டியிட்டு வருகின்றனர்.


இந்த Cryptocurrency-ன் ஒருவகை தான் Bitcoin ஆகும். Litecoin, Ethereum, Zcash, Ripple போன்ற வேறு பல Cryptocurrency நாணயங்களும் இருக்கின்றன. உலக அளவில் 11% இந்தியர்கள் இந்த Cryptocurrency-ல் முதலீடு செய்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.


இணையத்தில் மட்டுமே இந்த நாணயங்களை வாங்கவும், பயண்படுத்தவும் முடியும். இந்த நாணையங்களை பயண்படுத்தி சட்டவிரோதமான பொருட்கள் வாங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாட்டின் பொருளாதாரத்தினையே பாதிக்கும் இத்தகு அத்துமீறல்களை தடுக்க  பிரபல வலைதளங்களான Facebook, twitter இந்த Cryptocurrency குறித்த விளம்பரங்களை மக்களுக்கு கொண்டுச்செல்லும் விளம்பரங்களை தங்களது தளங்களில் இருந்து தடைசெய்துவிட்டன. இந்நிலையில் தற்போது Google  நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது!