அகமதாபாத்: உலகத்தில் நடக்கும் பிரச்சணைகளை கவனிக்க நேரம் தேவைப்படுவதால், அலுவலகத்திற்கு வர இயலாது என குஜராத் அரசு அதிகாரி ஒருவர் பரபரப்பு கடிதத்தினை தனது மேலதிகாரிக்கு எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநில அரசு அலுவலகத்தில் பணிபுரிபவர் ரமேஷ் சந்திர பிபார். இவர் கடந்த 8 மாதங்களில் 16 நாட்கள் மட்டுமே அலுவலகம் சென்றுள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது மேல் அதிகாரிக்கு ரமேஷ் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...


  • நான் கடவுளின் அவதாரம், விஷ்ணுவிம் 10-வது அவதாரமான கல்கி அவதாரம் நானே. எனவே என்னால் அலுவலகத்துக்கு வர இயலாது.

  • ‘உலக மக்களின் இன்னல்களை போக்க வீட்டில் நோன்பு இருக்கிறேன்’ 

  • “பிரபஞ்சத்தின் 5-வது பரிமாணத்துக்குள் நுழைந்து உலக மனசாட்சியை மாற்றுவதற்காக வீட்டில் தவம் செய்து வருகிறேன்.

  • தற்போது என்னால் தான் நாட்டில் மழையே பெய்கிறது


என குறிப்பிட்டு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். மேலும் மேற்கூறிய விஷயங்கள் அனைத்தினையும் விரைவில் நிரூபிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து தெளிவுபடுத்திக்கொள்ள செய்தியாளர்கள் ரமேஷ் சந்திரா-வை சந்தித்து பேசுகையில்... "கடந்த 2010-ஆம் ஆண்டில், தான் கல்கி அவதாரம் என்பதை உள்ளுணர்வின் அறிந்து கொண்டேன். அலுவலகத்தில் என்னை சும்மா உட்கார வைக்க அதிகாரிகள் விரும்புகிறார்கள், ஆனால் நான் வறட்சியிலிருந்து நாட்டை காப்பாற்ற விரும்புகின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்!