உலகம் முழுவதும் பாதிப்புகளை தீவிரப்படுத்தியிருக்கும் கொரோனாவின் புதிய உருமாற்றங்கள் கவலைகளை அதிகரித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோவிட்-19 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதில் ஒமிக்ரானின் பாதிப்பு 4,868 ஆக பதிவாகியுள்ளது...


இந்தியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி 1.5 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுகள் (Corona Virus) பதிவாகியுள்ளன. 


ஆனால், தொடர்ந்து நான்காவது நாளாக மும்பையில் கோவிட் வழக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில், கொரோனாவின் 3வது அலையின் தாக்கம் குரைந்து வருவதாகவும், அது தனது உச்சக்கட்டத்தில் இருந்து சற்று குறையத் தொடங்கியுள்ளது.


மகாராஷ்டிர மாநில கோவிட்-19 பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


ALSO READ | ஊரடங்கு: கோவையில் முழு அடைப்பு, வெறிச்சோடிய சாலைகள்


இதனிடையே, பொங்கலையொட்டி, இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


மேலும், தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


முன்னதாக, தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டு விட்டது என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமிக்ரானும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா மாறுபாடு வகை வைரஸ் (Delta Variant) என்று தெரியவந்துள்ளது.


ALSO READ | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள் 


ஒமிக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுகின்றனர். இதனால், மரபணு சோதனை கைவிடப்பட்டது. டெல்டாவும் ஒமிக்ரானும் இணைந்து இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது.


பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான பாதிப்பு இருப்பதால் வீட்டுத்தனிமையில் உள்ளனர் என்பதை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கருத்துக் கூறியிருந்தார்.


தமிழ்நாட்டில் பதிவான 11,000 புதிய கோவிட் வழக்குகளில் கிட்டத்தட்ட பாதி சென்னையிலிருந்து வந்துள்ளன,


டெல்லியில் 3.5 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இப்போது பள்ளி செல்லாத பதின்ம வயதினர் மீது கவனம் செலுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR