தினமும் உட்கொள்ள வேண்டிய 5 ஆரோக்கியமான மூலிகை உணவுகள்!
Healthy Herbs: நீங்கள் ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவில் சில மூலிகைகளை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Healthy Herbs: ஆம்லா முதல் ஏலக்காய் வரை, இதுபோன்ற சில மசாலாப் பொருட்கள் உள்ளன, அவை வழக்கமான முறையில் உட்கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதுபோன்ற 5 ஆரோக்கியமான மூலிகைகள் பற்றி இங்கே பார்ப்போம்.
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவில் சில மூலிகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவைகள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
உணவு செரிமானத்துடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெருஞ்சீரகம் உதவுகிறது. நீங்கள் வெந்தயத்தை நீரில் போட்டி காய்த்து அதைக் குடிக்கலாம்.
ஆம்லாவில் உள்ள வைட்டமின் சி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு முடியை ஆரோக்கியமா வளர உதவுகிறது. இதனை தினமும் சாப்பிடுவதால் உங்கள் கண்பார்வையையும் மேம்படும்.
ஆம்லா ஆக்ஸிஜனேற்றியாக வேலை செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
ALSO READ | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வேண்டுமா; உணவில் ‘இவற்றை’ சேர்க்கவும்
உங்களுக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிரச்சனை இருந்தால், ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயில் உள்ள எண்ணெய் ஆனது பாக்டீரியா மற்றும் பூஞ்சை கொல்ல உதவுகிறது.
மஞ்சள் உணவில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள். மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
மஞ்சள் மூட்டு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். மூட்டு பிரச்சனையை விரைவாக குணப்படுத்துகிறது.
இலவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீங்கள் அதை தேநீர், காபி மற்றும் பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் பரிந்துரைக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் ஆலோசனைகள் பொதுவான தகவல்களுக்கு மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது.
ALSO READ | உணவே மருந்து: உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR