Brain Foods: இன்றைய போட்டி மிக்க உலகில் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிக்க, மிக சுறுசுறுப்பான மூளையும், ஆரோக்கியமான மனமும் தேவைப்படுகிறது என்றால் மிகையாகாது. ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, மிக முக்கியமானது அவர்களின் உணவு. உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இயங்க, சில உணவுகளை உணவில் சேர்ப்பது சிறந்த பலனை தரும் என கூறுகிறார்.
இந்தச் செய்தியில், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இதுபோன்ற 5 உணவுப் பொருட்களை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு மூளையை சுறுசுறுப்பக்கும் உணவுகள் (kids brain food)
பச்சை காய்கறிகள் (Green Vegetables)
கீரை, வாழைப்பழம், ப்ரோக்கோலி மற்றும் இதர பச்சை நிற காய்கறிகள் கூர்மையான மூளைக்கு உதவும். தக்காளி போன்ற வேறு சில காய்கறிகளும் நல்லது. ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகள் கூட ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளன. இது மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிதும் உதவும்.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
முட்டை (Egg)
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் முட்டைகள் மிக அவசியம். இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குழந்தையின் கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கிறது. கோலிக் அசிடைல்கோலின் அல்லது நினைவக ஸ்டெம் செல்களை உருவாக்கவும் உதவுகிறது. எனவே, முட்டைகளை சாப்பிடுவது குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
முழு தானியங்கள் (Whole grains)
சிறுதானியங்கள் குழந்தைகளின் மூளைக்கு சிறந்த ஆற்றலைக் கொடுக்கும். இது இரத்த நாளங்களில் உள்ள குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. இதன் காரணமாக, குழந்தையின் உடலில் நாள் முழுவதும் ஆற்றல் இருக்கும். மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான ஃபோலிக் அமிலமும் இதில் உள்ளது.
ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்
ஓட்ஸ் (Oats)
ஓட்ஸ் உணவில், வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. ஓட்ஸ் உணவில் அதிக நார்ச்சத்து இருப்பதால், குழந்தையின் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. குழந்தைகளுக்கு காலை உணவாக ஓட்ஸ் உண்பது மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது.
மீன் (Fish)
குழந்தைகளின் மூளையை கூர்மையாக்க மீன் மிகவும் உதவும். சால்மன், டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை மூளை திசுக்களை உருவாக்க உதவுகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களில் பல நன்மைகள் உள்ளன. இது மூளையின் செயல்பாடுகளுக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR