Corona Virus Latest Update:  புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று மீண்டும் பரவ துவங்கி உள்ளது. 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியில் தற்போது புதிதாக ஒன்பது பேருக்கு கோவிட் நோய் பாதித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பருவ கால காய்ச்சல், மழை காலம் துவங்கும்போது வர கூடிய வைரஸ் காய்ச்சல் என இந்த கார்த்திகை மாத இறுதியில் புதுவையில் பலருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டு அவதிப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடும் காய்ச்சல், சளி, இருமல், சுவை இழப்பு என கொரோனாவுக்கு உள்ள அனைத்து அறிகுறிகளும் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு இருந்தது.


மேலும் படிக்க | மீண்டும் மீண்டு வருகிறதா கொரோனா? கோவிட் நோயை ஏற்படுத்தும் புதிய ஒமிக்ரான் எரிஸ்



ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சில நாட்களில் காய்ச்சல் சரியான நிலையில், சிலருக்கு காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை. இதனையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுச்சேரி சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டது.


மேலும் படிக்க: கொரோனாவால் 'இறந்த' நபர்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்!


கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடத்திய கொரோனா சோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்த நிலையில்,  நேற்று முன்தினம் 43 பேருக்கு நடத்திய சோதனையில், புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.


பாதிக்கப்பட்டவர்களில் கொரோனா தொற்று இருந்த ஒரு நோயாளி ஜிப்மர் மருத்துவமனையிலும், இரு நோயாளிகள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். எஞ்சிய ஆறு பேர் வீட்டில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இதனால் புதுச்சேரியின் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் கொரோனா பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கோவிட் போன்ற மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நோய்களின் பட்டியலை சில மாதங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு (WHO) உருவாக்கியது.


மேலும் படிக்க | சருமத்தை பளபளப்பாக்கும் செம்பருத்தி மலர்! பூச்சூடினால் அழகும் ஆரோக்கியம் நிச்சயம்


"முன்னுரிமை நோய்கள்" என்ற அந்தப் பட்டியலில் Disease X என்ற நோயும் உள்ளது. இந்தப் பட்டியலில் கோவிட்-19, எபோலா, லாசா காய்ச்சல், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East respiratory syndrome, MERS), நிபா மற்றும் ஜிகா ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.


கோவிட்-19 இருக்கும் என்ற சந்தேகமா? இந்த வழிமுறைகளை கடைபிடியுங்கள் 


  • பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

  • தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்

  • சாத்தியமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள்

  • திரவ உணவுகளை அதிகரிக்கவும்


சுவாசிப்பதில் சிரமம் அல்லது மார்பு வலி போன்ற கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். 


மேலும் படிக்க | இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல்! நோயாளிகளுக்கு மருந்து அலர்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ