சருமத்தை பளபளப்பாக்கும் செம்பருத்தி மலர்! பூச்சூடினால் அழகும் ஆரோக்கியம் நிச்சயம்

Healthy Hibiscus Flower: குளிர்ச்சி பொருந்திய செம்பருத்தி பூ, சருமத்திற்கும், உடல்நலனுக்கும் அற்புதமான பலன்களை அளிக்கிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலையும் தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் அற்புதமான தாவரம்... பூ, 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2023, 07:57 AM IST
  • ரத்தத்தை சுத்தம் செய்யும் செம்பருத்தி
  • தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் பூ
  • செம்பருத்தியின் அழகு பாதுகாப்பு
சருமத்தை பளபளப்பாக்கும் செம்பருத்தி மலர்! பூச்சூடினால் அழகும் ஆரோக்கியம் நிச்சயம் title=

பூக்கள் மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் பல அற்புத நன்மைகளை செய்கின்றன. அதிலும், செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கும், உடல்நலனுக்கும் அற்புதமான பலன்களை அளிக்கிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும் செம்பருத்தி பூ, இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான மருத்துவப் பண்புகளைக் கொண்டது. செம்பருத்தி பூவைப் தேநீராக தயாரித்து பருகிவந்தால் ஆரோக்கியம் மேம்படும், இதய பலவீனம் தீரும்.
 
குளுமைத்தன்மை கொண்ட செம்பருத்திப்ப்பூ, உடல் சூடு தணிக்கும் அற்புதமான பூ ஆகும். உடல் சூட்டினால் ஏற்படும் வாய்புண், வயிற்றுப்புண் உட்பட பல பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி மலர் நல்ல மருந்தாகிறது. தினமும் செம்பருத்திப்பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டு வந்தால், அதன் சாறும், பூவின் நார்ச்சத்தும் மருந்தாக செயபட்டு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். 

sembaruthi flower

கருமையான நீண்ட, பளபளப்பான ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என விரும்புபவர்களுக்கு செம்பருத்தி அருமருந்தாகும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் முடி உதிர்தல், பொடுகு, முடி உதிர்தல் ;பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ரசாயன சிகிச்சைகள் மற்றும் வண்ணம் பூசுவதால் தலைமுடி பளபளப்பு இழந்து பொலிவிழந்து காணப்படுகிறது. இவர்களுக்கு செம்பருத்திப் பூ நல்ல பலனைக் கொடுக்கும்.

மேலும் படிக்க | ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஜூஸ்கள்! தினமும் ஜூஸ் குடித்தால் ரத்தசோகைக்கு ஜூட்

உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வெளித்தோற்றத்திற்கும் செம்பருத்தி பூ மிகவும் சிறந்தது. தலைமுடி தொடர்பான பிரச்சனைகள், சரும பிரச்சனைகளை போக்கி அழகை மேம்படுத்தும் பூ, செம்பருத்தி.  செம்பருத்தியின் பூ மட்டுமல்ல, வேர், இலை என அதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை.

செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சி, வடி கட்டி, தலைமுடிக்கு பயன்படுத்தினால், வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி அடர்த்தியாக வளரும். அதுமட்டுமல்ல, செம்பருத்தி எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால், இளநரை மறையும், முடி நரைப்பது மெதுவாகும். 

மேலும் படிக்க | 10 வண்ணங்களில் உணவுக்கு பயன்படுத்தும் உப்பு! சுவையிலும் வித்தியாசம் காட்டும் உப்பு

அதேபோல, செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால், தலைமுடி பளபளக்கும், முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, தலையில் பேன்கள் மற்றும் பொடுகுத்தொல்லையும் குறையும். 

பெண்களுக்கு செம்பருத்தி பூ, ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் செம்பருத்தி பூ, கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த  நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

செம்பருத்தி பூவை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது தேநீராக தயாரித்து பருகிவந்தால், இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

மேலும் படிக்க | தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சருமம் அழகு மேம்படும், உடல் இளைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News