COVID Vaccine-ன் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் இங்கிலாந்தின் 90 வயதான Margaret Keenan
பிரிட்டன் வரலாற்றின் மிகப் பெரிய தடுப்பு மருந்து திட்டத்தின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டு விட்டது.
லண்டன்: பிரிட்டன் வரலாற்றின் மிகப் பெரிய தடுப்பு மருந்து திட்டத்தின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டு விட்டது. 90 வயதான மூதாட்டி, செவ்வாய்க்கிழமை இதைப் பெற்று, இந்த தடுப்பூசியைப் பெற்ற முதல் நபராக சரித்திரத்தில் இடம் பெற்றார். சோதனை ஆய்வகங்களில் பல தன்னார்வலர்கள் பல்வேறு கட்ட சோதனைகளில் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டிருக்கலாம். எனினும், பொது பயன்பாட்டிற்கு வந்தவுடன் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட முதல் நபர் இங்கிலாந்தின் 90 வயது பெண்மணி ஆவார்.
அடுத்த வாரம் 91 வயதை எட்டப்போகும் மார்கரெட் கீனன் என்ற இந்த பெண்மணி, "இது எனக்கு ஒரு வாரம் முன்னரே கிடைத்த மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசு" என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. கீனன் வடக்கு அயர்லாந்தில் உள்ள என்னிஸ்கில்லனைச் சேர்ந்தவர். அவர் இப்போது கோவென்ட்ரியில் வசிக்கிறார்.
"COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட முதல் நபராக நான் மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசு எனக்கு கிடைத்திருக்க முடியாது. இந்த ஆண்டின் முக்கால்வாசி நேரத்தை நான் தனியாக கழித்து விட்டேன். இந்த தடுப்பு மருந்தின் பயனாக இனி என்னால், புத்தாண்டில் எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது." என்று கீனன் கூறினார்.
ஓய்வுபெற்ற நகைக் கடை உதவியாளரான கீனனுக்கு, இங்கிலாந்தின் மிகப்பெரிய வெகுஜன தடுப்பூசி திட்டமான 'ஆபரேஷன் கரேஜியஸ்'-ன் ஒரு பகுதியாக உள்ளூர் மருத்துவமனையில் செவிலியர் மே பார்சன்ஸ் தடுப்பூசியை போட்டார்.
ALSO READ: Alert: குழந்தைகளுக்கு COVID-19 தொற்று இருப்பதே பெரும்பாலும் தெரிவதில்லை, கவனம் தேவை!!
"மே மற்றும் NHS (தேசிய சுகாதார சேவை) ஊழியர்களுக்கு என்னை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். தடுப்பூசி அளிக்கப்பட அழைக்கப்படும் அனைவரும் அதை மறுக்காமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். நான் 90 வயதில் இதை போட்டுக்கொண்டுள்ளேன். நீங்களும் தாராளமாக போட்டுக்கொள்ளலாம்.” என்றார் 90 வயதான கீனன்.
கடந்த வாரம் கட்டுப்பாட்டாளர்கள் அதன் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த பின்னர், Pfizer-ரால் உருவாக்கப்பட்ட COVID தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் நாடு யுனைடெட் கிங்டம் ஆகும்.
இங்கிலாந்தில் (England) தடுப்பூசி கட்டாயமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பு மருந்துக்கு இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) ஒப்புதல் அளித்ததிலிருந்து, தடுப்பூசியை மக்களிடையே கொண்டு செல்வதற்கான விரிவான நடைமுறை செயல்முறைகளை நிர்வகிக்க தங்கள் ஊழியர்கள் இடைவிடாது செயல்பட்டு வருவதாகக் NHS கூறியது.
ஃபைசர்-பயோஎன்டெக்கின் கோவிட் -19 தடுப்பு மருந்து (COVID-19 Vaccine), பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கு தேவையான கடுமையான தரங்களை பூர்த்தி செய்துள்ளதாக MHRA டிசம்பர் 2 அன்று கூறிய பிறகு, பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ட்வீட் செய்து: "தடுப்பு மருந்துகள் அளிக்கும் பாதுகாப்பு மூலம்தான் நாம் நமது பழைய வாழ்வை மீட்டெடுத்து, பொருளாதாரத்தையும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியும்” என்று கூறினார்.
ALSO READ: 30 நிமிடங்களில் COVID test result-ஐ தருகிறது இந்த மொபைல் அடிப்படையிலான செயல்முறை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR