மேஜிக் காளானின் நன்மைகள்: காளானின் நன்மைகளை நாம் அனைவரும் நன்கு அறிவோம், அதை நாம் கண்டிப்பாக சாப்பிட்டிருப்போம். ஆனால் மேஜிக் காளான் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், இது உங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக நன்மை பயக்கும். மேஜிக் காளானில் உள்ள சைகடெலிக் பொருள் சைலோசைபின், மன அழுத்தத்தில் வாழ்பவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அது அவர்களின் மனதை ரிலாக்ஸ் செய்ய பெரிதும் உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

60 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு


லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் உள்ள மனநோய் ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், மனச்சோர்வுக்கான சிகிச்சையில் இருந்த சுமார் 60 நோயாளிகளின் மூளை ஸ்கேன்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், சைலோசைபின் மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தாங்கள் கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க


மூன்று வாரங்களில் காணப்படும் முன்னேற்றம் 


சைலோசைபின் உள்ளிட்ட பிற சைகடெலிக் பொருட்கள், மன நோய்களுக்கான சாத்தியமான சிகிச்சையாக ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. பல ஆய்வுகளில், பதற்றம் மற்றும் மனச்சோர்வு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்தின் செயற்கை பதிப்பு அதன் செயல்திறனுக்காக சோதிக்கப்பட்டது. இரண்டு தனித்தனி ஆய்வுகளிலிருந்து தொகுக்கப்பட்ட சமீபத்திய கண்டுபிடிப்புகளில், சைலோசைபின்-உதவி சிகிச்சையைத் தேர்ந்தெடுத்த நோயாளிகள் சிகிச்சையின் போது மட்டுமல்ல, மூன்று வாரங்களுக்குப் பிறகும் மூளை இணைப்பில் முன்னேற்றத்தைக் கண்டனர்.


மேலும் படிக்க | மன அழுத்தம் 'மூளைக்கு' நல்லது! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்


சிகிச்சையில் சைலோசைபின் எவ்வாறு உதவுகிறது?


எஸ்கிடலோபிராம் எனப்படும் பாரம்பரிய ஆண்டிடிரஸன் மருந்தை விட சைகடெலிக் மன அழுத்தத்திற்கு வித்தியாசமாக சிகிச்சையளிப்பதாக தோன்றுகிறது, ஏனெனில் ஆண்டிடிரஸன் மருந்தை உட்கொள்ளும் நபர்களிடம் மூளை இணைப்பில் இதே போன்ற மாற்றங்கள் காணப்படவில்லை என்கின்றனர். இந்த முடிவுகள் இரண்டு ஆய்வுகளில் ஒரே மாதிரியாக வந்ததாக ஆராய்ச்சிக் குழு கூறுகிறது. மனச்சோர்வு என்பது மூளை செயல்பாட்டிம் கடினமான வடிவங்களை ஏற்படுத்தும் என்பதால், சைலோசைபின் மூளை இந்த முட்டுக்கட்டையைத் தவிர்க்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Health Alert: கவலை, மன சோர்வை அதிகரிக்கும் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ