குழந்தை பிறப்பை ஒத்திப்போடும் பெண்கள்; கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்துகிறதா..!!
தற்போது பெண்கள் பலரும் வாழ்க்கையில், ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னரே திருமணம் செய்வது நல்லது என்ற எண்ணத்திற்கு வந்திருக்கின்றனர்.
கடந்த தலைமுறையில் 20 வயதுக்குள் திருமணம் ஆனது. பின்னர் 20- 23 என்ற வயது சராசரி பெண்கள் திருமண வயதாக இருந்தது. ஆனால், தனிப்பட்ட பாதுகாப்பு, பொருளாதார தன்னிறைவு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் போன்ற பல விஷயங்களை மனதில் வைத்து, தற்போது பெண்கள் பலரும் வாழ்க்கையில், ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னரே திருமணம் செய்வது நல்லது என்ற எண்ணத்திற்கு வந்திருக்கின்றனர். பெரும்பாலும் பெண்கள் 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்வது பற்றியே யோசிக்கிறார்கள்.
தாமதமாக திருமணம் செய்து கொண்டாலும், உடனேயே குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்பதில்லை. அதற்கான காரணம், பரஸ்பரம் புரிந்து கொள்ளவும், நெருக்க ஏற்படவும் உள்ள வாய்ப்பை தவற விடக் கூடாது என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம். அல்லது குழந்தை பெற்றுக் கொண்டால், அதற்கான பொறுப்புகள் அதிகரித்து விடும். எனவே, இன்னும் கொஞ்ச நாள் திருமண வாழ்க்கையை அனுபவிக்கலாமே என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.
ALSO READ | பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான ‘5’ நாடுகள்
புது தில்லியில் உள்ள Cloudnine மருத்துவமனை குழுமத்தின், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் மயூர் தாஸ், இது குறித்து கூறுகையில், இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒத்தி போடுவது குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.
"பெரும்பாலான பெண்கள், 30 வயதிற்குப் பிறகே குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடத் தொடங்குகிறார்கள். குடும்ப பொறுப்புகளையும், பணியிட பொறுப்புகளையும் ஒரு சேர கையாளுவதில் உள்ள பிரச்சனைகள், வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கு நோக்கம், குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள நிதி மற்றும் பிற பொறுப்புகள் ஆகியவை குழந்தை பெற்றுக் கொள்வதை ஒத்தி போடுவதற்கான காரணங்களாக இருக்கலாம்." என்கிறார்.
ALSO READ | திருமண பந்தத்தில் இணைந்த ஓரின சேர்க்கையாளர்கள்
மேலும், தம்பதிகள் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு குழந்தைக போதும் என நினைக்கிறார்கள் என அவர் மேலும் குறிப்பிடுகிறார். கருவுறுதல் விகிதம் "தொடர்ந்து குறைந்து வருகிறது" என்றும் டாக்டர் தாஸ் கருதுகிறார். "தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2019 - 2021 ஆண்டில் எடுத்த கணக்கெடுப்புகளில், இதில் மொத்த கருவுறுதல் விகிதம் 2015-16 இல் 2.2 லிருந்து 2 ஆக குறைந்துள்ளது என்றும், நகர்ப்புற மக்கள்தொகையில் இந்த விகிதம் 1.6 ஆகவும், கிராமப்புற மக்கள் தொகையில் 2.1 ஆகவும் இருந்தது" எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவ ரீதியாக குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடுவதால் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. பெண்ணின் வயது அதிகமாக அதிகமாக அவரது சினைப்பையில் உள்ள கருமுட்டைகளின் தரமும் எண்ணிக்கையும் தரமும் குறைந்துகொண்டே வரும். அதோடு தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம் போன்றவை, கருமுட்டைகளின் தரத்தை இன்னும் குறைக்கின்றன.
அதோடு, பெண்ணிற்கு வயதாக வயதாக, பிறக்கும் குழந்தைக்கு பிறப்பிலேயே வரும், நோய்கள், குறைபாடுகள் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
ALSO READ | 'செக்ஸ் அடிமை' என்றால் என்ன? அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR