Love Harmone: 'செக்ஸ் அடிமை' என்றால் என்ன? அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவுகள்

பாலியல் அடிமைத்தனம் உண்மையானதா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கும் அதிர்ச்சளிக்கும் ஆய்வு முடிவுகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2022, 01:28 PM IST
  • காதல் ஹார்மோன்கள் படுத்தும் பாடு!
  • ஹார்மோன்களே பாலியல் குற்றங்களுக்கு காரணமா?
  • ஹார்மோன்களே காதல் அடிமைக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
Love Harmone: 'செக்ஸ் அடிமை' என்றால் என்ன? அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவுகள் title=

லண்டன்: செக்ஸ் அடிமைத்தனத்தை ஒரு நோயாக பார்க்க வேண்டுமா? 'காதல் ஹார்மோன்' ஆக்ஸிடாஸின் அதிக அளவு காரணமாக, பாலியல் அடிமையாதல் 'உண்மையானது' என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

இருப்பினும், சில நிபுணர்கள் இந்த ஆய்வின் முடிவுகளை ஏற்கவில்லை. பாலியல் அடிமைத்தனம் ஒரு நோய் அல்ல, பலவீனம் என்று அவர்கள் கூறுகிறார்கள். பாலியல் அடிமைத்தனம் கொண்ட ஆண்களின் நிலை ஹைப்பர்செக்சுவல் கோளாறு என்றும் அழைக்கப்படுகிறது.

'பாலியல் வேட்கைக்குக் அடிமையாதல்' என்பது குறித்த ஒரு ஆய்வில், பாலியல் அடிமைத்தனம் உண்மையானது என்று தெரியவந்துள்ளது, ஆனால் சில நிபுணர்கள் அதை ஒரு நோயாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. 

செக்ஸ் அடிமைத்தனம் ஒரு நோயல்ல என்றும், அதுவொரு பலவீனம் என்றும் அதை அப்படியே பார்க்க வேண்டும் என்றும் மருத்துவர் மேக்ஸ் பெம்பர்டன் (Dr. Max Pemberton) கூறுகிறார்.  ரத்தப் பரிசோதனையில் அதிக ஆக்ஸிடாசின் கண்டறியப்பட்டது.

ALSO READ | பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான ‘5’ நாடுகள்

ஆய்வின் போது, ​​பாலியல் உறவு மிக அதிகமாக தேவைப்படும் ஆண்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, அந்த ஆய்வில் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டதாக, 'டெய்லி மெயில்' பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 

உடலுறவுக்கு அடிமையான ஆண்களுக்கு மற்றவர்களை விட ஆக்ஸிடாஸின் அளவு அதிகமாக இருப்பதாக ('love hormone' oxytocin) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 
பாலியல் அடிமைத்தனம் முற்றிலும் ஒரு உயிரியல் நிலை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | தாய்லாந்து போகப்போறீங்களா? உங்களுக்கு ஒரு முக்கியமான நல்ல செய்தி!!

இது சம்பந்தப்பட்டவரின் தவறில்லை, அதற்காக அவரைக் குறை சொல்லக் கூடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், டாக்டர் மேக்ஸ் பெம்பர்ன், மாறுபட்ட சிந்தனையை முன்வைக்கிறார். மறுவாழ்வு கிளினிக்குகள் போன்ற பாலியல் அடிமையாதல் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பாலியல் அடிமைத்தனத்தை மருத்துவ நிலையாக மாற்ற முயற்சிக்கின்றன, 

ஆனால் இது நடந்தால், பாலியல் ரீதியாக தவறு செய்பவர்கள் மருத்துவ அடிப்படையில் எளிதில் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.

ஆனால், ஹைப்பர்செக்சுவல் கோளாறு உள்ளவர்களுக்கு ஆக்ஸிடாசினைத் தடுக்க உதவும் மருந்தை தங்கள் கண்டுபிடிப்பு உருவாக்க வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ALSO READ | திருமண பந்தத்தில் இணைந்த ஓரின சேர்க்கையாளர்கள்

பெம்பர்டனின் கூற்றுப்படி, அதிக ஆக்ஸிடாஸின் பாலியல் அடிமைத்தனத்துடன் தொடர்புடையது, ஆனால் அது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே, காதல் ஹர்மோனான அதிக ஆக்ஸிடாஸின் ('love hormone' oxytocin) சுரப்பவர்கள், தங்கள் பாலியல் வாழ்க்கையை அதற்கேற்றாற்போல திட்டமிடுவார்கள். 

ஆனால், ஒரு நபர் தனது ஹார்மோன்கள் அதிகரிப்பால் ஏற்படும் காம இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமல் அதற்கு அடிமையாகிவிடுகிறார் என்பதை நான் நம்ப மறுக்கிறேன் என்று பெம்பர்டன் கூறுகிறார்.

நமது நடத்தையின் மீது நமக்கு கட்டுப்பாடு உள்ளது. பாலியல் அடிமைத்தனம் ஒரு நோய் அல்ல, பலவீனம் என்றும், அதை ஒரு நோயாகக் கருதுவது பாலியல் ரீதியாக தவறு செய்பவர்கள் தப்பிக்க வாய்ப்பளிக்கும் என்றும் ருத்துவர் மேக்ஸ் பெம்பர்டன் (Dr. Max Pemberton) கூறுகிறார்.  

ALSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News