பழம்பெரும் பாலிவுட் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான சதீஷ் கௌசிக் தனது 66ஆவது வயதில் குருகிராமில் மாரடைப்பால் இன்று (மார்ச் 9) காலமானார். நடிகரின் நெருங்கிய நண்பரும், சக நடிகருமான அனுபம் கெர் ட்விட்டர் மூலம் அவர் காலமானதை உறுதிப்படுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டரில், அனுபம் கேர் எழுதினார்,"மரணமே இறுதி உண்மை என்று எனக்குத் தெரியும். ஆனால் என் அன்பு நண்பர் சதீஷ் கௌசிக்கைப் பற்றி நான் இதை எழுதுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. 45 வருட நட்புக்கு திடீர் முடிவு. நீ இல்லாமல் வாழ்க்கை ஒரு போதும் மாறாது சதீஷ்.


66 வயதான கௌஷிக், மார்ச் 7 அன்று புதுமணத் தம்பதிகளான ரிச்சா சாதா மற்றும் அலி ஃபசல் ஆகியோரை சந்தித்து, ஹோலி விருந்தில் கலந்து கொண்டார். மேலும் அவர் அதைப் பற்றி ட்வீட்டும் செய்திருந்தார். இந்நிலையில், அவரது உயிரிழப்பு செய்தி பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி, பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 60 வயதிற்கு மேலானவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும் நிலையில், அது ஏற்படுவதற்கான அறிகுறிகளை நிச்சயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. 


மேலும் படிக்க | அடிவயிறு தொப்பை குறையணுமா? இதை விதை தண்ணீர குடிங்க, உடனே குறையும்


60 வயதுக்கு மேல் இருந்தால் மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள்


மாரடைப்பின் அறிகுறிகள் தீவிரமானவை மற்றும் எளிதில் கண்டறியக்கூடியவை. இருப்பினும், அனைத்து மாரடைப்புகளும் அடையாளம் காணக்கூடிய அறிகுறிகளைக் கொண்டவை அல்ல. மாரடைப்பின் அறிகுறிகளை கவனமாக இருக்க வேண்டும். 


- மார்பின் மையத்தில் உள்ள மார்பு வலி அல்லது அசௌகரியம் பல நிமிடங்களுக்கு மேல் தொடர்கிறது அல்லது அது போய் மீண்டும் வருகிறது.


- கைகள், முதுகு, கழுத்து, தாடை, வயிறு போன்ற மேல் உடலின் பகுதிகளில் வலி, அசௌகரியம் அல்லது உணர்வின்மை. 


-மார்பு அசௌகரியத்துடன் அல்லது இல்லாமல் ஏற்படும் மூச்சுத் திணறல்.


- குளிர்ந்த வியர்வை ஏற்படுவது. 


- குமட்டல், பசியின்மை மற்றும்/அல்லது வாந்தி வருவது.


- தலைச்சுற்றல் ஏற்படுவது 


- விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு


- மாரடைப்புக்கு வழிவகுக்கும் நாள்களில் கடுமையான மற்றும் விவரிக்க முடியாத பலவீனம் ஏற்படும் அல்லது சோர்வு ஏற்படும்.


மாரடைப்பின் அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படுவதுபோல் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். 108ஐ அழைப்பது உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடிய விரைவான சிகிச்சையை உறுதி செய்யும். மாரடைப்பின் அறிகுறிகளைப் பற்றி அறிந்திருப்பதோடு, ஆரோக்கியமான உணவு, இருதய உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற சிறந்த வாழ்க்கை முறை தேர்வுகளை மேற்கொள்வது எதிர்காலத்தில் மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 


மேலும் படிக்க | எந்த கலர் திராட்சை கொலஸ்டாராலை கட்டுப்படுத்தும்? திராட்சைப்பழ ரகசியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ