கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே மழை பெய்தாலும் சிறிது நேரம் வெயில் அடித்தாலே மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இதனால் தங்களது உடல்நலத்தை சரியாக வைத்துக்கொள்ள கோடைகாலத்திற்கென்று நம் ஊரில் உணவு பழக்கங்களை மக்கள் அமைத்துக்கொள்வர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, பழைய சாதம், சின்ன வெங்காயம், மோர், இளநீர், பதநீர், தர்பூசணி என கோடை கால உணவுக்கென்று பட்டியல் உண்டு.உணவோடு விதவிதமான ஊறுகாய்கள்,வத்தல் போன்றவைகளையும் பலர் சாப்பிடுவார்கள். ஆனால் இதுபோன்ற தின் பண்டங்கலில் உப்பு, காரம் உள்ளிட்டவை அதிகம் இருப்பதால் கோடை காலத்தில் உடல்நலத்திற்கு நல்லதல்ல. 



கோடை காலம் மட்டுமின்றி எந்தக் காலத்திலும் உப்பு, காரம் அதிகம் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டுமென்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.


மேலும் படிக்க | இந்த பழத்தை சாப்பிட்டால் அதிகம் பசி எடுக்காமல் இருக்கும்


அதிக உப்பு சிறுநீரக பாதிப்புகளை 30 சதவீதம் கூடுதலாக ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். அதுவும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருந்தால் உப்பு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரக பிரச்னை அதிகமாகும்.


உப்பு அதிகம் எடுத்துக் கொள்வோர்க்கு தொடர்ந்து தலைவலி ஏற்படுவதோடு எடை கூடி வயிறு உப்பிசமும் உருவாக வாய்ப்பிருக்கிறது.அதுமட்டுமின்றி ரத்த அழுத்தம் உருவாகவும் வாய்ப்பு அதிகளவு இருக்கிறது. எனவே உப்பு அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்து ஆரோக்கியமாக அனைவரும் வாழ வேண்டும்.


மேலும் படிகக் | Weight Loss Tips in Tamil: 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் எடை குறைக்க டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!