இந்த பழத்தை சாப்பிட்டால் அதிகம் பசி எடுக்காமல் இருக்கும்

Banana For weight loss: வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிற்றுப் பிரச்சனைகளை நீக்கி, செரிமானத்தை சரியாக வைக்கும், இது வரை பசியை ஏற்படுத்தாது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 17, 2022, 01:44 PM IST
  • வாழைப்பழத்தில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.
  • வாழைப்பழத்தில் மாவுச்சத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.
  • வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
இந்த பழத்தை சாப்பிட்டால் அதிகம் பசி எடுக்காமல் இருக்கும் title=

சில பழங்கள் உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையில், இதுபோன்ற பழங்களை சாப்பிடுவது பசியைக் குறைக்க உதவுகிறது, இதன் காரணமாக தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலில் கிடைக்கின்றன மற்றும் நம் உடல் எடையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியாக வைத்து இருக்கிறது. சிறந்த ஆரோக்கியத்திற்காக, ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பழத்தை பற்றி இன்று நாம் காண உள்ளோம், இதனை உட்கொண்டால் உடலில் ஏற்படும் கெட்ட கொலஸ்ட்ராலை போக்க முடியும். 

வாழைப்பழத்தில் இந்த பண்புகள் உள்ளன
மற்ற பழங்களை விட வாழைப்பழமும் விலை குறைவு. இதில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் பிற கூறுகளையும் கொண்டுள்ளது. இது தவிர, இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனை உட்கொள்வதால், உடலில் பல நன்மைகள் காணப்படுகின்றன. இதில் காணப்படும் ஸ்டார்ச் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நாம் உடலுக்கு மிகவும் அவசியம்.

மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Banana | Zee News

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
* இது உடல் எடையை குறைப்பதோடு, பல பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. உங்களுக்கு எலும்பு வலி இருந்தால் கண்டிப்பாக இந்த பழத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் கால்சியம் அதிகமாகும். அவை நம் எலும்புகளை வலுவாக வைத்து இருக்கும்.
* உடல் சோர்வை போக்க வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், டிரிப்டோபான் என்ற தனிமம் வாழைப்பழத்தில் உள்ளது. இந்த டிரிப்டோபான் காரணமாக நமது உடலில் செரோடோனின் உற்பத்தி செய்யப்படுகிறது. செரோடோனின் மகிழ்ச்சியான ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது உடல் சோர்வை தடுக்கிறது.
* செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உண்மையில், வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் நமது செரிமான அமைப்புக்கு முக்கியமான நல்ல பாக்டீரியாக்களுக்கு நன்மை பயக்கும். வாழைப்பழம் அமில எதிர்ப்பு சக்தி வாய்ந்தது, எனவே உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருந்தால், வாழைப்பழத்தை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.
* வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதை அதிகமாக உட்கொள்வதால், இரத்தத்தில் அதிகப்படியான பொட்டாசியம் ஏற்படலாம், இதன் காரணமாக ஹைபர்கேமியா பிரச்சனை ஏற்படலாம், சில சமயங்களில் இது மாரடைப்புக்கும் வழிவகுக்கும். வாழைப்பழத்தில் மாவுச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை உட்கொள்வதால் பல் பிரச்சனைகளும் ஏற்படும்.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News