வயதிற்கேற்ப எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்! தெரியுமா?
மனிதர்களுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவு கோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.
இரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் உண்டு. இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் காலையில் வெகு சீக்கிரமாக அதிகாலையிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு. சரியாக தூங்காதவர்களை கண்களை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.
தற்போது வயதுக்கேற்ற தூக்கத்தை பார்ப்போம்:-
> பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை) : தினசரி 14-17 மணிநேரம் வரை தூங்க வேண்டும்
> குழந்தைகள் (4-11 மாதம் வரை) : தினசரி 12-15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும்.
> தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1-2 வயது வரை): தினமும் 11-14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும்
> பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3-5 வயது வரை) : தினமும் 10-13 மணி நேரங்கள் தூங்கவேண்டும்.
> பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6-13 வயது வரை): 9-11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும்.
> பதின்பருவச் சிறார்கள் (14-17 வயது வரை): தினமும் 8-10 மணிநேரம் தூங்கவேண்டும்.
> வயது வந்த இளைஞர்கள் ( 18-25 வயது வரை): தினமும் 7-9 மணி நேரங்கள் வரை தூங்கலாம்.
> வயது வந்தவர்கள் ( 26-64 வயது வரை): தினமும் 7-9 மணி நேரங்கள் தூங்க வேண்டும்
> மற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்): தினசரி 7-8 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.