Heat Stroke Symptoms: இந்தியா முழுவதும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் அதிகளவு வெப்பம் இருந்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறைவதாக இல்லை. தினசரி வீசும் அனல் காற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய நகரங்களில் வெப்பம் 45 டிகிரியை தாண்டியுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஹீட் ஸ்ட்ரோக் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழக்கவும் செய்துள்ளனர். இந்நிலையில், ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? அதன் ஆரம்பகால அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முகத்திற்கு பளபள பொலிவு கிடைக்க தயிரை இப்படி பயன்படுத்துங்கள்


ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?


பொதுவாக உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் உயரும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் போது, ​​உடல் வெப்பநிலை வேகமாக உயரும். ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால், உடல் வெப்பநிலை 10 முதல் 15 நிமிடங்களுக்குள் 106°F அல்லது அதற்கும் அதிகமாக உயரும். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணம் கூட ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.


ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்ன?


ஹீட் ஸ்ட்ரோக் நோயின் அறிகுறிகளை தெரிந்து கொண்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவிகரமாக இருக்கும். தலைவலி, அதிக காய்ச்சல், சுயநினைவு இழப்பு, மோசமான மன நிலை, குமட்டல் மற்றும் வாந்தி, தோல் சிவத்தல், திடீர் என்று இதயத் துடிப்பு அதிகரிப்பு, தோல் வறட்சி ஆகியவை ஹீட் ஸ்ட்ரோக் நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். பொதுவாக அதிக வெப்பநிலை உள்ள இடங்களில் அல்லது வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் சாதாரண வெப்பநிலையில் இருந்து, திடீரென்று அதிக வெப்பநிலைக்கு செல்லும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. மேலும் வெப்பநிலை அதிகமாக உள்ள நேரங்களில் உடற்பயிற்சி செய்தாலும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும்.


பலரும் தினசரி போதுமான தண்ணீர் குடிப்பதில்லை. கோடைகாலத்தில் உடலில் இருந்து அதிகளவு வியர்வை மூலம் தண்ணீர் வெளியேறுகிறது. இதனை சரி செய்ய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மேலும் அதிகமாக மது அருந்தினாலும் உடலில் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோடை காலத்தில் முடிந்த வரை லேசான உடைகளை அணிவது நல்லது. இது ஹீட் ஸ்ட்ரோக் அபாயத்தை தடுக்கும்.


ஹீட் ஸ்ட்ரோக்கின் ஆரம்ப சிகிச்சை 


உங்களில் யாருக்காவது ஹீட் ஸ்ட்ரோக் இருந்தால் சில ஆரம்ப சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். இருப்பினும் மருத்துவரிடம் அறிவுரை பெறுவதும் நல்லது. ஒருவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் அவரது உடைகளை சற்று விலக்கி நன்கு காற்று வரும் இடத்தில் உட்கார வைக்க வேண்டும். ஏசி அல்லது பேனுக்கு கீழ் உட்கார வைக்கலாம். பிறகு நல்ல குளிர்ந்த நீரில் குளிக்க வைப்பதும் அல்லது குளிர்ந்த நீரில் உடலை துடைப்பதும் அல்லது தலையில் ஐஸ் பேக் வைப்பது உடனடி தீர்வை கொடுக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ